JUL 20 EVENING

உன்னதப்பாட்டு 2:16-17

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

உன்னதப்பாட்டு 2:16-17

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவன்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். பகல் நிழல்சாயும் (Until the day break - விடியற்காலம் உதிக்கும்), அந்தகாரங்கள் ஓடிப்போம்மட்டும், என் நேசரே, திரும்பி, பெத்தேர் மலைகளிலுள்ள (mountains of Bether - பிரிவின் மலைகளிலுள்ள) கலைக்கும் மறைக்குடிக்கும் ஒப்பாயிரும்" (). நிச்சயமாக வேதாகமத்தில் ஏதாகிலும் ஒரு மகிழ்ச்சியான வசனம் இருக்குமானால் அது, "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவன்" என்ற இந்த வசனமே ஆகும். மிகவும் அமைதியான, மிகவும் உறுதியான, சந்தோஷத்தினாலும் திருப்தியினாலும் நிரம்பி வழிகிற இந்த வசனம், இருபத்திமூன்றாம் சங்கீதத்தை எழுதின அதே கரத்தினால் எழுதப்பட்டிருக்கலாம். என்றாலும் தோற்றம் மகா இன்பமானதாகவும் அழகானதாகவும் இருந்தாலும்—பூமி அதைவிடச் சிறந்ததொன்றைக் காண்பிக்க முடியாது—அது முற்றிலும் சூரிய ஒளி நிறைந்த நிலப்பரப்பு அல்ல. அங்கே வானத்தில் ஒரு மேகம் இருக்கிறது, அது அந்த இடத்தின் மேல் ஒரு நிழலைப் பரப்புகிறது. செவிகொடுத்துக் கேளுங்கள், "விடியற்காலம் உதிக்கும், அந்தகாரங்கள் ஓடிப்போம்மட்டும்."

"பெத்தேர் மலைகளைக்" குறித்தும், அல்லது "பிரிவின் மலைகளைக்" குறித்தும் அங்கே ஒரு வார்த்தை இருக்கிறது, நம்முடைய அன்பிற்குப் பிரிவு போன்ற ஒன்று கசப்பானது மாத்திரமே. பிரியமானவர்களே, இது உங்களுடைய தற்போதைய மனநிலையாக இருக்கலாம்; உங்களுடைய இரட்சிப்பை நீங்கள் சந்தேகிக்கவில்லை; கிறிஸ்து உங்களுடையவர் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் நீங்கள் அவரோடு பந்தியில் உட்காரவில்லை. அவரிடம் உங்களுக்கிருக்கும் ஜீவனுள்ள பங்கை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் அவருடையவர், அவர் உங்களுடையவர் என்பதில் உங்களுக்கு ஒரு துளி சந்தேகமும் இல்லை, ஆனால் இன்னும் அவருடைய இடதுகை உங்கள் தலையின் கீழ் இல்லை, அவருடைய வலதுகை உங்களைத் தழுவிக் கொள்ளவுமில்லை (). உபத்திரவத்தினாலோ, அல்லது நிச்சயமாக உங்களது கர்த்தரின் தற்காலிகப் பிரிவினாலோ உங்களுடைய இருதயத்தின் மேல் ஒரு துக்கத்தின் நிழல் பரவியிருக்கிறது, எனவே, "நான் அவருடையவன்" என்று கூப்பிடும் போதே, நீங்கள் முழங்காலிலிருந்து, "விடியற்காலம் உதிக்கும், அந்தகாரங்கள் ஓடிப்போம்மட்டும், என் நேசரே, திரும்பிவாரும்" என்று ஜெபிக்கத் தள்ளப்படுகிறீர்கள்.

"அவர் எங்கே இருக்கிறார்?" என்று ஆத்துமா கேட்கிறது. "அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்" என்ற பதில் வருகிறது. நாம் கிறிஸ்துவைக் கண்டடைய வேண்டுமானால், அவருடைய ஜனங்களின் ஐக்கியத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், அவருடைய பரிசுத்தவான்களோடு கூட நியமங்களுக்கு வர வேண்டும். ஓ, இன்று மாலை அவருடைய ஒரு தரிசனம் கிடைத்தால் நலமாயிருக்கும்! ஓ, இன்று இரவு அவரோடு கூடப் பந்தியிருக்கக் கிருபை கிடைப்பதாக!

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.