JUN 20 EVENING

மாற்கு 1:18

உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

மாற்கு 1:18

உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"உடனே அவைகள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்" (). இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடனே, சீமோனும் அந்திரேயாவும் எந்த ஒரு தடையுமின்றி உடனே கீழ்ப்படிந்தார்கள். நாம் கேட்கிறவைகளை உடனுக்குடனோ, அல்லது அதற்கேற்ற முதல் தருணத்திலோ, பரிசுத்த வைராக்கியத்தோடும் துரிதத்தோடும் எப்போதும் நடைமுறைப்படுத்துவோமானால், கிருபையின் சாதனங்களில் நாம் பங்குபெறுவதும், நல்ல புத்தகங்களை வாசிப்பதும் ஆவிக்குரிய பிரகாரமாய் நம்மைக் ஐசுவரியவான்களாக்குவது நிச்சயம். தன் அப்பத்தை உடனே புசிக்க ஜாக்கிரதையாய் இருந்தவன் அதை இழந்துபோக மாட்டான், அப்படியே உபதேசத்தின்படி உடனே கிரியை செய்தவனிடமிருந்து அதன் பிரயோஜனத்தைப் பறிக்க முடியாது. பெரும்பாலான வாசகர்களும் கேட்பவர்களும் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் வரை வருகிறார்கள்; ஆனால், அந்தோ! அந்த நோக்கம் பிணைக்கப்படாத ஒரு புஷ்பத்தைப் போல வறண்டு போவதால், அதிலிருந்து எந்த ஒரு கனியும் உண்டாவதில்லை; அவர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் அலைபாய்கிறார்கள், பின்பு அவர்கள் மறந்துவிடுகிறார்கள், இறுதியில் இரவிலே பனிக்கட்டியாய உறைந்து, பகலிலே சூரியன் பிரகாசிக்கும் போது உருகி, மீண்டும் உறைந்துபோகும் குளங்களைப் போல மாறுகிறார்கள். அந்த விசனகரமான "நாளைக்" காரியம் அழகான தீர்மானங்களைக் கொலை செய்வதினால் இரத்தக்கறை படிந்ததாய் இருக்கிறது; அது உத்தமமான நற்காரியங்களின் கொலைக்களமாய் இருக்கிறது. "சாயங்கால தியானங்கள்" என்ற நம்முடைய இந்தச் சிறிய புஸ்தகம் பலனற்றதாய் இராதபடி நாம் மிகவும் கவலையோடு இருக்கிறோம், எனவே வாசிப்பவர்கள் வாசிக்கிறவர்களாய் மாத்திரமிராமல், வார்த்தையின்படி செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம் (). சத்தியத்தை நடைமுறைப்படுத்துவதே அதை வாசிப்பதற்கான மிகச் சிறந்த பிரயோஜனமாகும். இந்தப் பக்கங்களை வாசிக்கும்போது வாசகனுக்கு ஏதாகிலும் ஒரு கடமை உணர்த்தப்பட்டால், பரிசுத்தமான அந்த உஷ்ணம் தன் ஆத்துமாவை விட்டு அகல்வதற்கு முன் அவன் அதை நிறைவேற்றத் தீவிரிக்கட்டும், எஜமானரின் அழைப்பிற்குக் கீழ்ப்படியாமல் போவதைக் காட்டிலும் தன் வலைகளையும் தனக்குள்ள யாவற்றையும் அவன் உடனே விட்டுவிடட்டும். தாமதப்படுத்துவதின் மூலம் பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள்! (). சிலாக்கியமும் உயிர்ப்பித்தலும் ஒன்றாக இணைந்திருக்கும் போதே தீவிரியுங்கள். உங்களுடைய சொந்த வலைகளில் நீங்கள் அகப்பட்டுக்கொள்ளாமல், உலகத்தன்மையின் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு, மகிமை உங்களை அழைக்கும் இடத்திற்கு நேராக ஓடுங்கள். தன் போதனைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருக்கும் வாசகர்களைச் சந்திக்கும் எழுத்தாளன் பாக்கியவான்: அவனுடைய அறுவடை நூறத்தனையாய் இருக்கும், அவனுடைய எஜமானருக்கு உன்னதமான கனம் உண்டாகும். இந்தச் சுருக்கமான தியானங்களும் அவசரமான குறிப்புகளும் அத்தகைய பலனை நமக்குத் தருவதாக. கர்த்தாவே, உமது அடியேனுக்கு இதை அருளியருளும். ஆமென்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.