JAN 21 MORNING

ரோமர் 11:26

இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

ரோமர் 11:26

இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"இப்படி இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்" (). மோசே சிவந்த சமுத்திரக் கரையில் பாடினபோது, இஸ்ரவேலர் எல்லாரும் பத்திரமாய் இருக்கிறார்கள் என்பதை அறிவதே அவனுடைய மகிழ்ச்சியாய் இருந்தது. தேவனுடைய இஸ்ரவேலரில் கடைசி மனிதன் வெள்ளத்தின் மறுபுறத்தில் தன் பாதத்தை பத்திரமாய் வைக்கும் வரை, அந்த உறுதியான மதிலிலிருந்து ஒரு துளி பனித்துளிகூடக் கீழே விழவில்லை. அது முடிந்தவுடனே, வெள்ளங்கள் தங்களின் தகுந்த இடத்திற்குத் திரும்பின, அதற்கு முன் அல்ல. அந்தப் பாடலின் ஒரு பகுதி, "நீர் மீட்டெடுத்த இந்த ஜனங்களை உமது கிருபையினாலே வழிநடத்தினீர்" () என்பதாக இருந்தது. கடைசி நாட்களில், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடும்போது, "நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை" என்பது இயேசுவின் மேட்டிமையான அறிக்கையாய் இருக்கும். பரலோகத்தில் எந்த ஒரு சிங்காசனமும் காலியாக இருக்காது. "தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியார் எல்லாரும் சிங்காசனத்தைச் சுற்றிக் கூடிவந்து, அவருடைய கிருபையின் வழிநடத்துதலை ஸ்தோத்தரித்து, அவருடைய மகிமைகளை வெளிப்படுத்துவார்கள்." தேவன் எத்தனை பேரைத் தெரிந்துகொண்டாரோ, கிறிஸ்து எத்தனை பேரை மீட்டெடுத்தாரோ, ஆவியானவர் எத்தனை பேரை அழைத்தாரோ, இயேசுவை விசுவாசிக்கிற யாவரும் பிரிக்கும் சமுத்திரத்தைப் பத்திரமாய்க் கடப்பார்கள். நாம் எல்லாரும் இன்னும் பத்திரமாய்க் கரைசேரவில்லை: "சேனையின் ஒரு பகுதி வெள்ளத்தைக் கடந்துவிட்டது, ஒரு பகுதி இப்போது கடந்து கொண்டிருக்கிறது." அந்தச் சேனையின் முன்அணி ஏற்கனவே கரையை அடைந்துவிட்டது. நாம் ஆழங்களின் வழியாய் நடந்து கொண்டிருக்கிறோம்; இந்த நாளில் நம்முடைய தலைவரைப் பின்பற்றிச் சமுத்திரத்தின் மையத்திற்குள் தீவிரமாய் முன்னேறுகிறோம். நாம் தைரியமாய் இருப்போமாக: முன்அணி ஏற்கனவே இருக்கும் இடத்திற்குப் பின்அணியும் சீக்கிரத்தில் வந்து சேரும்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் கடைசி மனிதனும் சீக்கிரத்தில் சமுத்திரத்தைக் கடந்துவிடுவான், எல்லாரும் பாதுகாப்பாய் இருக்கும்போது ஜெயகம்பீரத்தின் கீதம் கேட்கப்படும். ஆனால் ஆ! ஒருவன் இல்லாமல் போனாலும்—ஆ! அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட குடும்பத்தில் ஒருவன் கைவிடப்பட்டாலும்—அது மீட்டெடுக்கப்பட்டவர்களின் கீதத்தில் நித்தியமான ஒரு சுருதிபேதத்தை உண்டாக்கும், பரதீசின் சுரமண்டலங்களின் நரம்புகளை அறுத்துப்போடும், அதன்பின் அவைகளிலிருந்து ஒருபோதும் இசையை வரவழைக்க முடியாது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.