JAN 21 EVENING

நியாயாதிபதிகள் 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

நியாயாதிபதிகள் 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

அவன்: "மிகவும் தாகங்கொண்டு, கர்த்தரை நோக்கிப் கூப்பிட்டு: நீர் உமது அடியேன் கையில் இந்தப் பெரிய இரட்சிப்பைத் தந்தருளினீர்; இப்பொழுது நான் தாகத்தினால் சாக வேண்டுமா?" () என்றான். சிம்சோன் தாகங்கொண்டு சாகும் நிலைக்குக் தள்ளப்பட்டான். இந்த இக்கட்டு அந்த வீரன் இதுவரை சந்தித்த எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமானதாய் இருந்தது. தாகத்தைத் தணித்துக் கொள்வது என்பது ஆயிரம் பெலிஸ்தரிடமிருந்து தப்புவதைக் காட்டிலும் அற்பமான காரியமே! ஆனால் தாகம் தன்மேல் வந்தபோது, விசேஷித்த விதத்தில் தான் மீட்கப்பட்ட கடந்தகால மாபெரும் இக்கட்டை விட, தற்போதைய இந்தச் சிறிய இக்கட்டு மிகவும் பாரமானது என்று சிம்சோன் உணர்ந்தான். தேவனுடைய மக்கள் ஒரு மாபெரும் இரட்சிப்பை அநுபவித்த பின்பு, ஒரு சிறிய உபத்திரவத்தைக் கூட தங்களால் தாங்க முடியாதபடி உணருவது மிகவும் வழக்கமான ஒன்றாகும். சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தரைக் கொன்று, அவர்களைக் குவியல் குவியலாகக் குவித்துவிட்டு, பின்பு ஒரு சொட்டுத் தண்ணீருக்காகச் சோர்ந்துபோகிறான்! யாக்கோபு பேனியேலில் தேவனோடு போராடி, சர்வவல்லமையையே மேற்கொண்டு, பின்பு "தன் தொடைச்சந்து சுளுக்கினதினால் நொண்டி நொண்டி நடக்கிறான்" (). நாம் ஜெயத்தைப் பெறும்போதெல்லாம் நரம்புகளில் ஒரு தளர்ச்சி ஏற்படுவது விசித்திரமானதுதான். நாம் வரம்பிற்குள் வாழும்படி கர்த்தர் நம்முடைய சிறுமையையும், நம்முடைய ஒன்றுமில்லாமையையும் நமக்குக் கற்பிக்க வேண்டும் என்பது போல இது இருக்கிறது. "நான் ஆயிரம் பேரைக் கொன்றேன்" என்று சொன்னபோது சிம்சோன் உன்னதமான மேட்டிமையோடு பேசினான். அவனுடைய மேட்டிமையான தொண்டை தாகத்தினால் சீக்கிரத்தில் கரகரப்படைந்தது, அவன் ஜெபிக்கத் தொடங்கினான். தேவன் தமது மக்களைத் தாழ்த்துவதற்குப் பல வழிகளை வைத்திருக்கிறார். தேவனுடைய அன்பான பிள்ளையே, மாபெரும் கிருபையைப் பெற்ற பின்பு நீ மிகவும் தாழ்த்தப்பட்டிருந்தால், உன்னுடைய சூழ்நிலை ஒன்றும் விசித்திரமானது அல்ல. தாவீது இஸ்ரவேலின் சிங்காசனத்தில் ஏறிய பின்பு, "நான் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தும், இன்று பலவீனனாயிருக்கிறேன்" () என்றார். உன்னுடைய மாபெரும் ஜெயத்தை நீ அநுபவிக்கும் போதே நீ மிகவும் பலவீனமாய் உணருவதை எதிர்பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் தேவன் உனக்காக மாபெரும் இரட்சிப்புகளை நடப்பித்திருந்தால், உன்னுடைய தற்போதைய இக்கட்டு சிம்சோனின் தாகத்தைப் போன்றதே, கர்த்தர் உன்னைச் சோர்ந்துபோக விடமாட்டார், விருத்தசேதனமில்லாதவர்களின் குமாரத்திகள் உன்மேல் ஜெயங்கொள்ள அனுமதிக்கவும் மாட்டார். துக்கத்தின் பாதையே பரலோகத்திற்கான பாதை, ஆனால் அந்தப் பாதை நெடுகிலும் புத்துணர்ச்சி தரும் நீரூற்றுகள் உண்டு. எனவே, சோதிக்கப்படும் சகோதரனே, சிம்சோனின் வார்த்தைகளால் உன் இருதயத்தைத் தேற்றிக்கொள், தேவன் உன்னைச் சீக்கிரத்தில் இரட்சிப்பார் என்று உறுதியாய் நம்பு.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.