JUL 21 EVENING

சங்கீதம் 42:9

நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

சங்கீதம் 42:9

நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் ஏன் துக்கங்கொண்டாடி நடக்கவேண்டும்?" (). விசுவாசியே, இதற்கு உன்னால் பதிலளிக்க முடியுமா? சந்தோஷப்படுவதற்குப் பதிலாக நீ ஏன் இவ்வளவு அடிக்கடி துக்கங்கொண்டாடுகிறாய் என்பதற்கு ஏதாகிலும் ஒரு காரணத்தைக் கண்டடைய முடியுமா? அந்தகாரமான எதிர்பார்ப்புகளுக்கு ஏன் இடம் கொடுக்கிறாய்? இரவு ஒருபோதும் பகலாக மாறாது என்று உனக்குச் சொன்னவர் யார்? கொடூரமான வறுமையின் வண்டல் மண்ணைத் தவிர வேறு எதுவும் மீதியிராதபடிக்குச் சூழ்நிலைகளின் சமுத்திரம் வற்றிப் போகும் என்று உனக்குச் சொன்னவர் யார்? உன்னுடைய முறுமுறுப்பின் குளிர்காலம் உறைபனியிலிருந்து உறைபனிக்கும், உறைந்த மழையிலிருந்தும் கல்மழையிலிருந்தும் மகா ஆழமான திகைப்பின் பெருவெள்ள புயலுக்கு நேராகவே செல்லும் என்று உனக்குச் சொன்னவர் யார்? இரவுக்குப் பின் பகலும், வற்றலுக்குப் பின் அலைகளும், குளிர்காலத்திற்குப் பின் வசந்தகாலமும் கோடைகாலமும் வரும் என்பதை நீ அறியாயோ? அப்படியானால் நம்பிக்கையோடிரு! எப்போதுமே நம்பிக்கையோடிரு! ஏனெனில் தேவன் உனக்குத் தவறுவதில்லை. இவைகளின் மத்தியிலும் உன்னுடைய தேவன் உன்னிடத்தில் அன்புகூருகிறார் என்பதை நீ அறியாயோ? அந்தகாரத்தில் மறைந்திருக்கும் போது மலைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாய் பகலிலும் இருக்கின்றன, உன்னுடைய மகா பிரகாசமான தருணங்களில் எப்படியோ அப்படியே இப்போதும் தேவனுடைய அன்பு உனக்கு உண்மையுள்ளதாய் இருக்கிறது. எந்த ஒரு பிதாவும் எப்போதும் சிட்சிப்பதில்லை: நீ பிரம்பை வெறுப்பது போலவே உன்னுடைய கர்த்தரும் அதை வெறுக்கிறார்; உன்னுடைய நித்திய நன்மைக்காகவே அது கிரியை செய்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மாத்திரமே அவர் அதைப் பயன்படுத்தக் கவலைப்படுகிறார். நீ இன்னும் தூதர்களோடு கூட யாக்கோபின் ஏணியின் மேல் ஏறி, அதன் உச்சியில் வீற்றிருக்கிற உன்னுடைய உடன்படிக்கையின் தேவனைத் தரிசிப்பாய் (). நீ இன்னும், நித்தியத்தின் மகிமைகளின் மத்தியில், காலத்தின் சோதனைகளை மறந்துவிடுவாய், அல்லது அவைகளின் வழியாய் உன்னை நடத்தி, அவைகளினாலே உனக்கு நித்திய நன்மையை நடப்பித்த தேவனை ஸ்தோத்திரிப்பதற்காக மாத்திரமே அவைகளை நினைவுகூருவாய். வா, உபத்திரவத்தின் மத்தியிலும் பாடு. சூளையின் வழியாய்க் கடந்து போகும் போதும் களிகூரு. வனாந்தரத்தை ரோஜாப் புஷ்பத்தைப் போல மலரச் செய்! உன்னுடைய ஜெயசந்தோஷங்களினால் அவலட்சணமான வனாந்தரத்தை அதிரப்பண்ணு, ஏனெனில் இந்த லேசான உபத்திரவங்கள் சீக்கிரத்தில் தீர்ந்துபோகும், பின்பு 'என்றென்றைக்கும் கர்த்தருடனேகூட இருப்போம்,' உன்னுடைய பேரின்பம் ஒருபோதும் மங்காது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.