JUN 21 EVENING

2 தீமோத்தேயு 2:19

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

2 தீமோத்தேயு 2:19

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"தேவனுடைய அஸ்திபாரம் நிலையாயிருக்கிறது" (). நம்முடைய விசுவாசம் சார்ந்திருக்கும் அஸ்திபாரம் இதுவே, அதாவது, "தேவன் உலகத்தாருடைய அக்கிரமங்களை எண்ணாமல், கிறிஸ்துவினாலே அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்" (). உண்மையான விசுவாசம் சார்ந்திருக்கும் மாண்புமிகு உண்மை என்னவென்றால், "வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்" () என்பதும், "கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி, நீதியுள்ளவர் அநீதியுள்ளவர்களுக்காகப் பாவங்களினிமித்தம் ஒருமுறை பாடுபட்டார்" () என்பதுமே; "அவர் தாமே நமது பாவங்களைத் தமது சரீரத்திலே சிலுவையின்மேல் சுமந்தார்" (); "நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (). ஒரே வார்த்தையில் கூறுவதானால், கிறிஸ்தவ நம்பிக்கையின் மாபெரும் தூண் தற்காப்புப் பலி (substitution) ஆகும். குற்றவாளிகளுக்காகக் கிறிஸ்து செய்த மாற்றுப் பலி, நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்குப் பாவமறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினது (), பிதா தமக்குக் கொடுத்தவர்களாய் தேவனால் பேர் பேராக அறியப்பட்டிருக்கிற, தங்களின் இருதயங்களில் இயேசுவை நம்புவதின் மூலம் தங்களை உணர்ந்திருக்கிற யாவருடைய இடத்திலும், நிலமையிலும், போக்கிலும் கிறிஸ்து ஒரு உண்மையான, தகுந்த பாவநிவிர்த்திப் பலியைச் சமர்ப்பித்தது—இதுவே நற்செய்தியின் முதன்மையான உண்மையாய் இருக்கிறது. இந்த அஸ்திபாரம் அகற்றப்பட்டால் நாம் என்ன செய்ய முடியும்? ஆனால் அது தேவனுடைய சிங்காசனத்தைப் போல நிலையாய் நிற்கிறது. நாம் அதை அறிவோம்; அதன் மேல் சாருகிறோம்; அதில் களிகூருகிறோம்; நம்முடைய நடத்தை மற்றும் பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் அதற்குரிய நன்றியறிதலினால் ஏவப்பட்டு நடக்க வாஞ்சிக்கும் போதே, அதை இறுகப் பற்றிக் கொள்வதும், அதைத் தியானிப்பதும், அதைப் பிரகடனம் செய்வதுமே நம்முடைய பேரின்பமாய் இருக்கிறது. இந்நாட்களில் பாவநிவிர்த்தியின் உபதேசத்திற்கு விரோதமாக நேரடித் தாக்குதல் நடத்தப்படுகிறது. மனிதர்களால் தற்காப்புப் பலியைத் தாங்க முடிவதில்லை. தேவ ஆட்டுக்குட்டி மனிதனுடைய பாவத்தைச் சுமப்பார் என்ற சிந்தனையைக் கண்டு அவர்கள் பற்கடிக்கிறார்கள். ஆனால், இந்தச் சத்தியத்தின் விலையேறப்பெற்ற தன்மையை அநுபவ பூர்வமாய் அறிந்திருக்கிற நாமோ, அவர்களுக்கு விரோதமாக உன்னதமான நம்பிக்கையோடும் ஓயாமலும் அதைப் பிரகடனம் செய்வோம். நாம் அதை நீர்க்கச் செய்யவுமாட்டோம், மாற்றவுமாட்டோம், எந்த வடிவத்திலும் அதை அற்பமாக்கவுமாட்டோம். மனிதனுடைய குற்றத்தைச் சுமந்து, மனிதர்களின் இடத்தில் பாடுபடுகிற திட்டவட்டமான மாற்றுப் பலியாகிய கிறிஸ்துவாகவே அது இன்னும் இருக்கும். நாம் அதை விட்டுவிட முடியாது, அதற்குத் துணியவும் மாட்டோம், ஏனெனில் அதுவே நம்முடைய ஜீவன், சகல விவாதங்களையும் தாண்டி நாம், "ஆயினும் தேவனுடைய அஸ்திபாரம் நிலையாயிருக்கிறது" என்பதை உணருகிறோம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.