JAN 22 MORNING

எசேக்கியேல் 15:2

மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?

எசேக்கியேல் 15:2

மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மனுபுத்திரனே, காட்டுமரங்களுக்குள்ளிருக்கிற எல்லாக் கொம்புகளையும்விட, திராட்சச்செடி எம்மாத்திரம்?" (). இந்த வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களைத் தாழ்த்துவதற்கானவை; அவர்கள் தேவனுடைய திராட்சச்செடி என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால் சுபாவத்தின்படி மற்றவர்களை விட அவர்கள் எம்மாத்திரம்? தேவனுடைய நன்மையினாலே, அவர்கள் ஒரு நல்ல நிலத்தில் நாட்டப்பட்டுப் பலனுள்ளவைகளாக மாறியிருக்கிறார்கள்; கர்த்தர் அவர்களை ஆலயத்தின் மதில்களில் படரச் செய்திருக்கிறார், அவர்கள் அவருடைய மகிமைக்கென்று கனிகளைக் கொடுக்கிறார்கள்; ஆனால் தங்களின் தேவன் இல்லாமல் அவர்கள் எம்மாத்திரம்? தங்களுக்குள் பலனை உண்டாக்குகிற பரிசுத்த ஆவியானவரின் மாறாத ஏவுதல் இல்லாமல் அவர்கள் எம்மாத்திரம்? ஓ விசுவாசியே, பெருமை பாராட்டுவதற்கு உனக்கு ஒரு ஆதாரமும் இல்லாததால் அதை வெறுக்கக் கற்றுக்கொள். நீ எப்படிப்பட்டவனாக இருந்தாலும், பெருமைப்படுவதற்கு உன்னிடம் எதுவும் இல்லை. உன்னிடம் அதிகமாக இருக்க இருக்க, நீ தேவனுக்கு அவ்வளவு அதிகமாய் கடன்பட்டிருக்கிறாய்; உன்னைக் கடனாளியாக்கும் ஒன்றைக் குறித்து நீ பெருமைப்படக் கூடாது. உன்னுடைய ஆரம்பத்தைச் சிந்தித்துப் பார்; நீ கடந்த காலத்தில் எப்படி இருந்தாய் என்று திரும்பிப் பார். தெய்வீகக் கிருபை மட்டும் இல்லாவிட்டால் நீ எப்படி இருந்திருப்பாய் என்று சிந்தித்துப் பார். இப்போது நீ இருக்கும் நிலையை உற்றுப் பார். உன்னுடைய மனச்சாட்சி உன்னைக் கடிந்து கொள்ளவில்லையா? உன்னுடைய ஆயிரக்கணக்கான வழிவிலகல்கள் உனக்கு முன்பாக நின்று, நீ அவருடைய மகன் என்று அழைக்கப்படத் தகுதியற்றவன் என்று உனக்குக் கூறவில்லையா? அவர் உன்னை ஏதாகிலும் உருவாக்கியிருந்தால், நீ மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவது கிருபையினால்தான் என்பது உனக்குக் கற்பிக்கப்படவில்லையா? மாபெரும் விசுவாசியே, தேவன் உன்னை வித்தியாசப்படுத்தாமல் இருந்திருந்தால் நீ ஒரு மாபெரும் பாவியாய் இருந்திருப்பாய். சத்தியத்திற்காக வைராக்கியமாய் இருக்கும் உன்னைக் கிருபை பற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால், நீ தவற்றிற்காகவும் அவ்வளவு வைராக்கியமாய் இருந்திருப்பாய். எனவே, உன்னிடம் பெரிய சுதந்தரம்—கிருபையின் பரந்த எல்லை இருந்தாலும் பெருமைப்படாதே, உன்னுடைய பாவத்தையும் ஆக்கினையையும் தவிர உனக்குச் சொந்தமானது என்று சொல்ல ஒரு காலத்திலும் உன்னிடம் ஒரு காரியமும் இருக்கவில்லை. ஆ! விசித்திரமான மயக்கம், எல்லாவற்றையும் இரவலாய் வாங்கின நீ, உன்னை உயர்த்திக் கொள்ள நினைக்கிறாயே; உன்னுடைய இரட்சகரின் தாராள குணத்தைச் சார்ந்திருக்கும் ஒரு ஏழைப் பிச்சைக்காரன் நீ, இயேசுவிடமிருந்து வரும் ஜீவனின் புதிய நீரோடைகள் இல்லாவிட்டால் அழிந்துபோகும் ஜீவனைக் கொண்டிருக்கிற நீ, இன்னும் பெருமைப்படுகிறாயே! உன்னைக் குறித்து எனக்கே வெட்கமாய் இருக்கிறது, ஓ மதியற்ற இருதயமே!

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.