JUL 22 MORNING

எரேமியா 3:14

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

எரேமியா 3:14

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் உங்களுக்கு நாயகன் (married unto you - மணவாளன்)" (). கிறிஸ்து இயேசு தமது ஜனங்களோடு திருமண உடன்படிக்கையினால் இணைக்கப்பட்டிருக்கிறார். அவர் அன்பினாலே தமது சபையைத் தீட்டுப்படாத கன்னிகையாக, அவள் அடிமைத்தனத்தின் நுகத்தின் கீழ் விழுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே நியமித்துக் கொண்டார். உருக்கமான அன்பினால் நிறைந்தவராய், ராகேலுக்காக யாக்கோபு பிரயாசப்பட்டது போல, அவளுடைய மீட்புக் கிரயம் முழுவதும் செலுத்தப்படும் வரை அவர் பிரயாசப்பட்டார், இப்போதோ, தமது ஆவியினாலே அவளைத் தேடிக் கண்டுபிடித்து, அவளைத் தம்மை அறியவும் நேசிக்கவும் செய்த பின்பு, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில் தங்களின் பரஸ்பர பேரின்பம் பூரணமடையும் அந்த மகிமையான மணிநேரத்திற்காக அவர் காத்திருக்கிறார் (வெளிப்படுத்துதல் 19:9). மகிமையான மணவாளன் இன்னும் தமது நியமிக்கப்பட்டவளை, பூரணமடைந்தவளாய், பரலோக மகத்துவத்திற்கு முன்பாக நிறுத்தவில்லை; அவளுடைய தகுதிகளுக்கு ஏற்ற இன்பங்களை அவருடைய மனைவியாகவும் ராஜஸ்திரீயாகவும் அவள் இன்னும் மெய்யாக அநுபவிக்கத் தொடங்கவில்லை: அவள் இன்னும் துக்க உலகத்தில் அலைகிறவளாகவும், கேதாரின் கூடாரங்களில் குடியிருக்கிறவளாகவும் இருக்கிறாள் (); என்றாலும் அவள் இப்போதே இயேசுவின் மணவாட்டியாய், அவருடைய இருதயத்திற்குப் பிரியமானவளாய், அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவளாய், அவருடைய உள்ளங்கைகளில் செதுக்கப்பட்டவளாய், அவருடைய ஆளுமையோடு இணைக்கப்பட்டவளாய் இருக்கிறாள். பூமியில் அவர் அவளிடத்தில் கணவனுக்குரிய அன்பான ஊழியங்கள் யாவையும் நடப்பிக்கிறார். அவளுடைய தேவைகளுக்கு ஐசுவரியமான பேணுதல்களைச் செய்கிறார், அவளுடைய கடன்கள் யாவையும் தீர்க்கிறார், தன் நாமத்தைத் தரித்துக் கொள்ளவும் தன் சகல ஐசுவரியங்களிலும் பங்குபெறவும் அவளை அனுமதிக்கிறார். அவர் அவளிடத்தில் வேறு விதமாய் ஒருபோதும் நடக்க மாட்டார். தள்ளிப்போடுதல் என்ற வார்த்தையை அவர் ஒருபோதும் உச்சரிக்க மாட்டார், ஏனெனில் "தள்ளிவிடுகிறதை வெறுக்கிறேன் என்று... கர்த்தர் சொல்லுகிறார்" (). மரணம் என்பது மகா அன்பான மனிதர்களுக்கு இடையே உள்ள திருமணக் கட்டை அவிழ்த்துவிடலாம், ஆனால் இந்த அழியாத திருமணத்தின் பிணைப்புகளை அதினால் பிரிக்க முடியாது. பரலோகத்தில் அவர்கள் விவாகம்பண்ணுவதுமில்லை, விவாகம்பண்ணிக் கொடுக்கப்படுவதுமில்லை, தேவனுடைய தூதர்களைப்போல இருக்கிறார்கள் (); என்றாலும் அந்த விதிக்கு இந்த ஓர் ஆச்சரியமான விதிவிலக்கு உண்டு, ஏனெனில் பரலோகத்தில் கிறிஸ்துவும் அவருடைய சபையும் தங்களின் மகிழ்ச்சியான திருமணத்தைக் கொண்டாடுவார்கள். இந்த உறவு மகா நீடித்ததாய் இருப்பது போல, பூலோகத் திருமணத்தைக் காட்டிலும் மகா நெருக்கமானதாயும் இருக்கிறது. ஒரு கணவனுடைய அன்பு எவ்வளவு தூய்மையானதாகவும் உருக்கமானதாகவும் இருந்தாலும், அது இயேசுவின் இருதயத்தில் எரியும் ஜுவாலைக்கு ஒரு மங்கிய நிழலாட்டமே ஆகும். மனித உறவுகள் யாவையும் விஞ்சியது சபையோடு கொள்ளும் அந்த ரகசிய பிணைப்பாகும், இதற்காகவே கிறிஸ்து தன் பிதாவை விட்டு வந்து, அவளோடு ஒரே மாம்சமானார் ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.