JUN 22 EVENING

எபிரெயர் 12:27

இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.

எபிரெயர் 12:27

இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அசையாதவைகள் நிலைத்திருக்கும்படி" (). தற்போதைய கணத்தில் அசையக் கூடிய அநேக காரியங்களை நாம் நம்முடைய சுதந்தரமாய்க் கொண்டிருக்கிறோம், ஒரு கிறிஸ்தவ மனிதன் அவைகளின் மேல் அதிக ஆசை வைப்பது தகாது, ஏனெனில் உருண்டோடும் இந்த வானத்தின் கீழ் நிலையானது எதுவுமில்லை; எல்லாவற்றின் மேலும் மாற்றம் என்பது எழுதப்பட்டிருக்கிறது. என்றாலும், நாம் "அசையாத சில காரியங்களை" உடையவர்களாய் இருக்கிறோம், இன்று மாலை அவைகளைப் பற்றிச் சிந்திக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன், அதனால் அசையக் கூடிய காரியங்கள் யாவும் நீக்கப்பட்டாலும், நிலைத்திருக்கும் அந்த அசையாத காரியங்களிலிருந்து நீங்கள் உண்மையான ஆறுதலைப் பெறலாம். உங்களுடைய இழப்புகள் எதுவாக இருந்தாலும், அல்லது எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் தற்போதைய இரட்சிப்பை அநுபவிக்கிறீர்கள். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தை மாத்திரமே நம்பியவர்களாய் நீங்கள் அவருடைய சிலாக்கியமான சிலுவையின் பாதப்படியில் நிற்கிறீர்கள், சந்தையின் எந்த ஒரு ஏற்ற இறக்கமும் அவருக்குள் உங்களுக்கு இருக்கும் இரட்சிப்பைக் கெடுத்துவிட முடியாது; வங்கிகளின் முறிவோ, நஷ்டங்களோ அல்லது திவாலாகுதலோ அதைத் தொட முடியாது. பின்பு நீங்கள் இன்று மாலை தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறீர்கள். தேவன் உங்களுடைய பிதா. சூழ்நிலைகளின் எந்த ஒரு மாற்றமும் அதை உங்களிடமிருந்து பறிக்க முடியாது. இழப்புகளினால் வறுமைக்குள்ளாக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டாலும் உங்களால், "அவர் இன்னும் என் பிதா. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; எனவே நான் கலங்கமாட்டேன்" என்று சொல்ல முடியும். உங்களிடம் மற்றொரு நிலையான ஆசீர்வாதம் உண்டு, அதுவே இயேசு கிறிஸ்துவின் அன்பு. தேவனும் மனிதனுமாய் இருக்கிற அவர் தன் அன்பான சுபாவத்தின் முழுப் பலத்தோடும் உங்களை நேசிக்கிறார்—எதனாலும் அதை அசைக்க முடியாது. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், மந்தைகள் தொழுவத்தில் அற்றுப்போனாலும், "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவன்" என்று பாடக் கூடிய மனிதனுக்கு அது ஒரு பொருட்டல்ல (). நம்முடைய மிகச் சிறந்த பங்கையும் ஐசுவரியமான சுதந்தரத்தையும் நாம் இழக்க முடியாது. எப்பேர்ப்பட்ட உபத்திரவங்கள் வந்தாலும், நாம் தைரியமாய் இருப்போம்; காலத்தின் இந்த ஏழையான, கடந்துபோகும் நிலையில் நடப்பவைகளினால் கலங்கிப் போக நாம் ஒன்றும் சிறிய பிள்ளைகள் அல்ல என்பதைக் காண்பிப்போம். நம்முடைய தேசம் இம்மானுவேலின் தேசம், நம்முடைய நம்பிக்கை வானத்திற்கு மேலாய் இருக்கிறது, எனவே, கோடைகாலத்துக் கடலைப் போல அமைதியாய்; பூமிக்குரிய எல்லாவற்றின் அழிவையும் நாம் காண்போம், என்றாலும் நம்முடைய இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவோம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.