JAN 23 EVENING

உன்னதப்பாட்டு 1:4

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

உன்னதப்பாட்டு 1:4

என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"உம்முடைய நேசத்தைத் திராட்சரசத்தைவிட அதிகமாய் நினைப்போம்" (). இயேசு தமது ஜனங்கள் அவருடைய அன்பை மறந்துவிட அனுமதிக்க மாட்டார். அவர்கள் அநுபவித்த அன்பெல்லாம் மறக்கப்படும் பட்சத்தில், அவர் புதிய அன்போடு அவர்களைச் சந்திப்பார். "நீ என் சிலுவையை மறக்கிறாயா?" என்கிறார் அவர், "அதை நீ நினைவுகூரும்படி நான் செய்வேன்; ஏனெனில் என் பந்தியில் நான் உனக்குப் புதியதாய் என்னை வெளிப்படுத்துவேன். நித்தியத்தின் ஆலோசனை அறையில் நான் உனக்காகச் செய்ததை நீ மறக்கிறாயா? உனக்கு ஒரு ஆலோசகர் தேவைப்படும்போது நான் உனக்கு நினைவூட்டுவேன், நீ கூப்பிடும்போது நான் ஆயத்தமாய் இருப்பேன்." தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் தங்களை மறந்துவிட அனுமதிக்க மாட்டார்கள். மகன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று வீட்டிற்கு எழுதாமல் இருந்தால், அவனுடைய தாய் எழுதுவாள்—"ஜான் தன் தாயை மறந்துவிட்டானா?" பின்பு அங்கிருந்து ஒரு இனிமையான பதில் கடிதம் வரும், அது அந்த அன்பான நினைவூட்டல் வீணாகப் போகவில்லை என்பதை நிரூபிக்கும். இயேசுவும் அப்படித்தான், அவர் நம்மை நோக்கி, "என்னை நினைவுகூருங்கள்" என்கிறார், நம்முடைய பதில், "உம்முடைய நேசத்தை நாங்கள் நினைப்போம்" என்பதாக இருக்கிறது. உம்முடைய நேசத்தையும் அதன் ஒப்பிடமுடியாத வரலாற்றையும் நாங்கள் நினைப்போம். அது உலகம் உண்டாவதற்கு முன்னே நீர் பிதாவோடு கொண்டிருந்த மகிமையைப் போலப் பூர்வகாலத்து உறவுடையது. ஓ இயேசுவே, நீர் எங்களுடைய பிணைப்பாளராக மாறி, எங்களை உமக்கு மணவாட்டியாக நியமித்துக் கொண்ட உமது நித்திய அன்பை நாங்கள் நினைக்கிறோம். உம்மைக் பலியாகத் தருவதற்குக் காரணமாய் இருந்த அன்பு, காலத்தின் நிறைவேறுதல் வரை அந்தப் பலியைப் தியானித்து, புஸ்தகச் சுருளில் உம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடி, "இதோ, வருகிறேன்" என்று சொல்லும் அந்த நேரத்திற்காக வாஞ்சித்த உமது அன்பை நாங்கள் நினைக்கிறோம். பெத்லகேமின் முன்னணையிலிருந்து கெத்செமனே தோட்டம் வரை உமது பரிசுத்த வாழ்க்கையில் எங்களுக்கு வெளிப்பட்ட உமது அன்பை, ஓ இயேசுவே, நாங்கள் நினைக்கிறோம். முன்னணையிலிருந்து கல்லறை வரை உங்களைப் பின்தொடருகிறோம்—ஏனெனில் உமது ஒவ்வொரு வார்த்தையும் செயலும் அன்பாகவே இருந்தது—மரணத்தாலும் தீர்க்க முடியாத உமது அன்பில் நாங்கள் மகிழ்கிறோம்; உமது உயிர்த்தெழுதலில் பிரகாசமாய் ஒளிரும் உமது அன்பு. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எல்லாரும் பத்திரமாய் அரமனைக்குள் சேர்க்கப்படும் வரை, சீயோன் மகிமைப்படும் வரை, எருசலேம் பரலோகத்தில் வெளிச்சம் மற்றும் அன்பின் நித்திய அஸ்திபாரங்களின் மேல் நிலைநிறுத்தப்படும் வரை, நீர் மௌனமாய் இருக்க விடாத உமது அன்பின் எரியும் அக்கினியை நாங்கள் நினைக்கிறோம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.