JUL 23 MORNING

ஒபprop 1:11

ஒபprop 1:11

Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்" (). இக்கட்டான நேரத்தில் ஏதோமிலிருந்து இஸ்ரவேலுக்குச் சகோதரத்துவக் கனிவு உரியதாய் இருந்தது, ஆனால் அதற்குப் பதிலாக, ஏசாவின் மனிதர்கள் இஸ்ரவேலின் சத்துருக்களோடு பொதுவான காரணத்திற்காக இணைந்தார்கள். நமக்கு முன்பாக இருக்கும் இந்த வசனத்தில் 'நீ' என்ற வார்த்தையின் மேல் விசேஷித்த பாரம் வைக்கப்படுகிறது; சீசர் புருடஸை நோக்கி, "நீயும் புருடஸா" என்று கதறினது போல; ஒரு தீய செயல் அதை நடப்பின மனிதனிமித்தம் இன்னும் கொடியதாய் மாறலாம். பரலோகத்தின் விசேஷித்த பிரியமானவர்களாய் இருக்கிற நாம் பாவம் செய்யும்போது, நாம் உன்னதமான பாரத்தோடு பாவம் செய்கிறோம்; நாம் விசேஷித்த விதத்தில் அரவணைக்கப்பட்டபடியால் நம்முடையது கூப்பிடும் அக்கிரமமாய் இருக்கிறது. நாம் தீமை செய்யும்போது ஒரு தூதன் தன் கரத்தை நம்மேல் வைப்பாரானால், அவர், "நீயா? நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்ற கேள்வியைத் தவிர வேறு எந்தக் கடிந்துகொள்ளுதலையும் பயன்படுத்தத் தேவையில்லை. அதிகம் மன்னிக்கப்பட்டு, அதிகம் மீட்கப்பட்டு, அதிகம் உபதேசிக்கப்பட்டு, அதிகம் ஐசுவரியவான்களாக்கப்பட்டு, அதிகம் ஆசீர்வதிக்கப்பட்ட நாம், தீமைக்கு நேராக நம்முடைய கரத்தை நீட்டத் துணிவோமா? அது கூடாதே!

அடக்கமான வாசகரே, இன்று காலை சில நிமிடங்கள் பாவ அறிக்கை செய்வது உனக்குப் பிரயோஜனமாய் இருக்கும். நீ ஒருபோதும் பக்தி இல்லாதவர்களைப் போல இருந்ததில்லையா? மாலை நேரக் கூட்டமொன்றில் சிலர் அசுத்தமான காரியங்களைப் பார்த்து நகைத்தபோது, அந்தப் பரியாசம் உன்னுடைய காதுகளுக்கு முற்றிலும் வெறுப்பை உண்டாக்கவில்லை, நீயும் அவர்களில் ஒருவனைப் போல இருந்தாய். தேவனுடைய வழிகளைக் குறித்துக் கடினமான காரியங்கள் பேசப்பட்டபோது, நீ வெட்கப்பட்டு மௌனமாய் இருந்தாய்; அப்படியே பார்ப்பவர்களின் கண்களுக்கு நீயும் அவர்களில் ஒருவனைப் போல இருந்தாய். உலக மனிதர்கள் சந்தையிலே வியாபாரம் செய்து கொடூரமான பேரங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, நீயும் அவா்களைப் போல இருக்கவில்லையா? அவர்கள் வேட்டைக்காரனின் பாதத்தோடு மாயையைப் பின்தொடர்ந்த போது, நீயும் அவா்களைப் போலவே ஆதாயத்திற்காக பேராசை கொள்ளவில்லையா? உனக்கும் அவர்களுக்கும் இடையே ஏதாகிலும் ஒரு வித்தியாசத்தைக் கண்டறிய முடிந்ததா? ஏதாகிலும் வித்தியாசம் இருக்கிறதா? இதோ நாம் மிக அருகில் வருகிறோம். உன்னுடைய சொந்த ஆத்துமாவோடு நேர்மையாய் இரு, நீ கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டி என்பதை நிச்சயித்துக் கொள்; ஆனால் இது நிச்சயமான பின்பு, ஒருவன் மீண்டும், "நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்" என்று சொல்லாதபடிக்கு மகா விழிப்புணர்வோடு நட. அவர்களுடைய நித்திய ஆக்கினைத்தீர்ப்பில் பங்குபெற நீ விரும்ப மாட்டாய், அப்படியிருக்க இங்கே ஏன் அவா்களைப் போல இருக்கிறாய்? அவா்களுடைய அழிவுக்குள் நீ அகப்படாதபடி அவர்களுடைய இரகசியத்திற்குள் பிரவேசியாதே. உலகத்தோடு அல்ல, உபத்திரவப்படும் தேவனுடைய ஜனங்களோடு நில்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.