JUN 23 MORNING

ஓசியா 7:8

எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிபோடாத அப்பம்.

ஓசியா 7:8

எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிபோடாத அப்பம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்" (). திருப்பிப்போடாத அப்பம் ஒரு பக்கத்தில் வேகாமல் இருக்கும்; அப்படியே எப்பிராயீமும் பல அர்த்தங்களில் தெய்வீகக் கிருபையினால் தொடப்படாதவனாய் இருந்தான்: ஏதோ ஒரு பகுதியான கீழ்ப்படிதல் இருந்தபோதிலும், அவனிடம் ஏராளமான கலகத்தன்மை மீதியாயிருந்தது. என் ஆத்துமாவே, உன்னுடைய நிலையும் இப்படித்தான் இருக்கிறதா என்று பார். தேவனுடைய காரியங்களில் நீ உத்தமனாய் இருக்கிறாயா? கிருபை உன்னுடைய சுபாவத்தின் மையப் பகுதி வரை ஊடுருவி, உன்னுடைய எல்லா வல்லமைகளிலும், செயல்களிலும், வார்த்தைகளிலும், மற்றும் எண்ணங்களிலும் அதன் தெய்வீகக் கிரியைகள் உணரப்பட்டிருக்கிறதா? ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் பரிசுத்தமாக்கப்படுவது உன்னுடைய நோக்கமாகவும் ஜெபமாகவும் இருக்க வேண்டும்; உனக்குள் எந்த ஒரு பகுதியிலும் பரிசுத்தமாக்கல் பூரணமடையாமல் இருந்தாலும், அது தன் கிரியையில் எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும்; ஒரு இடத்தில் பரிசுத்தத்தின் வேஷமும் மற்றொரு இடத்தில் பாவத்தின் ஆளுகையும் இருக்கக் கூடாது, இல்லையென்றால் நீயும் திருப்பிப்போடாத அப்பத்தைப் போல இருப்பாய்.

திருப்பிப்போடாத அப்பம் நெருப்பிற்கு அருகில் இருக்கும் பக்கத்தில் சீக்கிரத்தில் கருகிவிடும், ஒரு மனிதனுக்குள்ளும் அதிக பக்தி இருக்க முடியாது என்றாலும், தாங்கள் பெற்ற சத்தியத்தின் அந்தப் பகுதிக்காக மாத்திரமே பெருமைக்கார வைராக்கியத்தினால் கறுப்பாய்க் கருகிப் போனவர்கள் சிலர் இருக்கிறார்கள், அல்லது தங்களின் சுபாவத்திற்கு ஏற்ற பக்திவிருத்தியின் கிரியைகளை வீம்பான பரிசேய வேஷத்தோடு செய்து சாம்பலாய்ப் போனவர்கள் சிலர் இருக்கிறார்கள். உன்னதமான பரிசுத்தத்தின் போலி வேஷம் பெரும்பாலும் ஜீவனுள்ள பக்தியின் பூரணமான வறுமையோடிருப்பதே வழக்கம். வெளியில் பரிசுத்தனாய் இருப்பவன் அந்தரங்கத்தில் பிசாசாய் இருக்கிறான். அவன் பகலில் மாவையும் இரவில் கரியையும் வியாபாரம் செய்கிறான். ஒரு பக்கத்தில் கருகிப் போன அப்பம் மறுபக்கத்தில் மாவாய் இருக்கும்.

என்னுடைய நிலையும் அப்படித்தான் இருக்குமானால், ஓ ஆண்டவரே, என்னைத் திருப்பிப்போடும்! என்னுடைய பரிசுத்தமாக்கப்படாத சுபாவத்தை உமது அன்பின் அக்கினிக்கு நேராகத் திருப்பி, அது பரிசுத்தமான உஷ்ணத்தை உணரச் செய்யும், உமது பரலோக ஜுவாலையிலிருந்து நான் விலகியிருக்கும்போது என் சொந்த பலவீனத்தையும் உஷ்ணமில்லாத வறுமையையும் நான் கற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருகிப்போன என் பக்கம் சற்று குளிரட்டும். நான் இருமனமுள்ள மனிதனாகக் காணப்படாமல், ஆளுகை செய்யும் கிருபையின் பலத்த ஏவுதலுக்கு முற்றிலும் கீழ்ப்பட்டவனாய் இருக்கச் செய்யும்; ஏனெனில் நான் திருப்பிப்போடாத அப்பத்தைப் போலக் கைவிடப்பட்டு, இரு பக்கமும் உமது கிருபையின் பொருளாக மாறாமல் போனால், நித்திய எரியும் அக்கினிக்குள் நான் என்றென்றைக்குமாய் பட்சிக்கப்பட வேண்டும் என்பதை நான் நன்றாய் அறிவேன்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.