AUG 24 MORNING

மீகா 2:13

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

மீகா 2:13

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"திறக்கிறவன் அவர்களுக்கு முன்பாக நடந்துவருகிறான்" (). இயேசு நமக்கு முன்பாகச் சென்றுவிட்டபடியால், அவர் அந்த வழியைக் கடந்து வராவிட்டிருந்தால் காரியங்கள் எவ்வாறிருந்திருக்குமோ அவ்வாறு இப்போது இல்லை. அவர் அந்த வழியில் தடையாய் இருந்த ஒவ்வொரு சத்துருவையும் ஜெயித்திருக்கிறார். சோர்ந்துபோன போர்ச்சேவகனே, இப்போதே தைரியமாய் இரு. கிறிஸ்து அந்தப் பாதையில் பயணம் செய்தது மாத்திரமல்ல, அவர் உன்னுடைய சத்துருக்களைக் கொன்றொழித்திருக்கிறார். பாவத்தைக் குறித்து அஞ்சுகிறாயா? அதைத் தமது சிலுவையில் ஆணியடித்திருக்கிறார் (). மரணத்தைக் குறித்துப் பயப்படுகிறாயா? அவர் மரணத்திற்கு மரணமாய் இருந்திருக்கிறார். நரகத்தைக் குறித்துப் பயப்படுகிறாயா? தன் பிள்ளைகளில் எவனும் அதின் வாசற்படிக்குள் பிரவேசிக்காதபடிக்கு அவர் அதை அடைத்துவிட்டார்; அவர்கள் ஒருபோதும் நரகத்தின் பெருவெள்ளத்தைக் காண மாட்டார்கள். கிறிஸ்தவனுக்கு முன்பாக என்ன சத்துருக்கள் இருந்தாலும், அவர்கள் எல்லாரும் ஜெயிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே சிங்கங்கள் உண்டு, ஆனால் அவைகளின் பற்கள் முறிக்கப்பட்டிருக்கின்றன; அங்கே பாம்புகள் உண்டு, ஆனால் அவைகளின் விஷப்பற்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன; அங்கே நதிகள் உண்டு, ஆனால் அவைகளுக்குப் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அல்லது அவைகளைக் கடக்க வழியுண்டு; அங்கே அக்கினிகள் உண்டு, ஆனால் நாம் அக்கினிக்கு அஞ்சாத அந்த ஒப்பிடமுடியாத வஸ்திரத்தைத் தரித்திருக்கிறோம் (). நமக்கு விரோதமாகப் புனையப்பட்ட பட்டயம் ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்டது; சத்துரு ஆயத்தப்படுத்தும் யுத்த ஆயுதங்கள் ஏற்கனவே தங்கள் முனையை இழந்துவிட்டன. கிறிஸ்துவினுடைய ஆளுமையில் நம்மைக் காயப்படுத்தும் சகல வல்லமையையும் தேவன் நீக்கிவிட்டார். அப்படியானால், சேனை பத்திரமாய் முன்னோக்கிப் படகெடுத்துச் செல்லலாம், உங்களுடைய எல்லா சத்துருக்களும் முன்னமே ஜெயிக்கப்பட்டிருக்கிறபடியால் நீங்களும் உங்கள் பிரயாணத்தில் சந்தோஷமாய்ச் செல்லலாம். கொள்ளைப் பொருளைச் சுதந்தரிக்க நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தவிர வேறு என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள், ஜெயிக்கப்பட்டார்கள்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வது மாத்திரமே. நீங்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்பது உண்மைதான்; ஆனால் உங்களது யுத்தம் ஜெயிக்கப்பட்ட சத்துருவோடே இருக்கும். அவனுடைய தலை நொறுக்கப்பட்டது; அவன் உங்களைக் காயப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவனுடைய பலம் அவனுடைய பொல்லாத நோக்கத்திற்குப் போதாது. உங்களது ஜெயம் எளிமையானதாய் இருக்கும், உங்களுடைய பொக்கிஷம் எண்ண முடியாததாய் இருக்கும்.

"இரட்சகருடைய புகழை உரத்த சத்தமாகப் பிரகடனம் செய், உடைப்பவன் என்னும் அதிசயமான நாமத்தைத் தாங்குகிறவரை; இனிமையான நாமம்; அது அவருக்கு மகா பொருத்தமாய் இருக்கிறது, பூமி, பாவம், மரணம், மற்றும் நரகத்தை உடைத்துப் போடுகிறவருக்கு."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.