JUN 24 MORNING

லுூக்கா 11:27-28

அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

லுூக்கா 11:27-28

அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ சத்தமிட்டு நோக்கி: "உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றாள். அதற்கு அவர்: அப்படியானால், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கைக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்" (). நம்முடைய கர்த்தருக்குத் தாயாய் இருந்தது மகா விசேஷித்த சிலாக்கியங்களை உள்ளடக்கிய ஒன்று என்று சிலரால் வீம்பாய் எண்ணப்படுகிறது, ஏனெனில் நாம் வாஞ்சிக்கக் கூட முடியாத வழியில் அவருடைய இருதயத்திற்குள் நோக்கிப் பார்க்கும் சிலாக்கியத்தை அவள் பெற்றிருந்தாள் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த எண்ணத்தில் ஏதோ ஒரு நியாயமான தோற்றம் இருக்கலாம், ஆனால் அதிகமில்லை. மரியாள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் அறிந்திருந்தாள் என்று நாம் அறியோம்; அவள் எதை அறிந்திருந்தாளோ அதைத் தன் இருதயத்திலே பதிய வைத்தது நல்லதுதான்; ஆனால் சுவிசேஷகர்களில் நாம் வாசிக்கும் எதிலிருந்தும், கிறிஸ்துவின் மற்ற சீஷர்களைக் காட்டிலும் அவள் அதிக அறிவுள்ள விசுவாசியாக இருந்ததாகத் தெரியவில்லை. அவள் அறிந்திருந்த யாவற்றையும் நாமும் கண்டறியலாம். நாம் ஏன் அப்படிச் சொல்கிறோம் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அதை நிரூபிக்க இதோ ஒரு வசனம்: "கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களிடத்தில் அவருடைய இரகசியம் இருக்கிறது; அவருடைய உடன்படிக்கையை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்" (). எஜமானரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பாருங்கள்—"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, எஜமான் செய்கிறதை ஊழியக்காரன் அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதரென்று சொன்னேன், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்" (). இரகசியங்களை வெளிப்படுத்துகிற இந்த தெய்வீக வெளிப்படுத்துபவர், நமக்குப் பிரியமான எதையும் மறைத்து வைக்காமல் தன் இருதயத்தை நமக்கு அவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட விதமாய் வெளிப்படுத்துகிறார்; அவருடைய சொந்த உறுதிப்பாடு, "அப்படியல்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்" () என்பதாகும். அவர் உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்தாத விதத்தில் இன்று நமக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார் அல்லவா? அது அப்படியே இருக்கிறது; எனவே நாம் அறியாமையோடு, "உம்மைச் சுமந்த கர்ப்பம் பாக்கியமுள்ளது" என்று சத்தமிடாமல், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்ளுகிற விசுவாசிகளாகிய நாமே, கன்னி மரியாள் கொண்டிருந்த அதே உண்மையான ஐக்கியத்தை முதலாவதாக இரட்சகரோடு கொண்டிருக்கிறோம் என்றும், இரண்டாவதாக அவள் பெற்றிருக்கக் கூடிய அதே உண்மையான அறிவை அவருடைய இருதயத்தின் இரகசியங்களில் நாமும் பெற்றிருக்கிறோம் என்றும் புத்தியோடு தேவனை ஸ்தோத்தரிப்போம். இத்தகைய சிலாக்கியத்தைப் பெற்ற ஆத்துமா பாக்கியமுள்ளது!

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.