AUG 25 MORNING

உன்னதப்பாட்டு 2:3

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

உன்னதப்பாட்டு 2:3

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவருடைய கனி என் வாய்க்கு இனிமையாய் இருந்தது" (). வேதாகமத்தில் விசுவாசம் என்பது சகல புலன்களின் அடையாளத்தின் கீழும் பேசப்படுகிறது. அது பார்வை: "என்னை நோக்கிப் பாருங்கள், இரட்சிக்கப்படுங்கள்" (). அது கேட்டல்: "செவிகொடுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்" (). விசுவாசம் நுகர்தல் ஆகும்: "உமது வஸ்திரங்கள் யாவும் வெள்ளைப்போளமும் தாளகமும் கஸ்தூரியும் வாசனை வீசுகிறது;" "உமது நாமம் திறக்கப்பட்ட தைலமாய் இருக்கிறது" (). விசுவாசம் ஆவிக்குரிய தொடுதல் ஆகும். இந்த விசுவாசத்தினாலேதான் அந்த ஸ்திரீ பின்னாடி வந்து கிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், இதனால் நாமும் ஜீவனுள்ள நற்கிரியைகளின் வார்த்தையின் காரியங்களைத் தொடுகிறோம் (). விசுவாசம் ஆவியின் ருசியாகவும் இருக்கிறது. "உம்முடைய வார்த்தைகள் என் தாடிக்கு எவ்வளவு இனிமையானவைகள்! என் வாய்க்குத் தேனிலும் மதுரமானவைகள்" (). "ஒருவன் என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணினாலழிய அவனுக்குள்ளே ஜீவனில்லை" என்றார் கிறிஸ்து ().

இந்தத் "ருசித்தல்" என்பது விசுவாசத்தின் மகா உன்னதமான கிரியைகளில் ஒன்றாகும். விசுவாசத்தின் முதல் செயல்பாடுகளில் ஒன்று கேட்டலாகும். நாம் தேவனுடைய குரலை வெளிப்புறக் காதுடன் மாத்திரமல்ல, உட்புறக் காதுடனும் கேட்கிறோம்; அது தேவனுடைய வார்த்தை என்று கேட்கிறோம், அதுவே அப்படி இருக்கிறது என்றும் விசுவாசிக்கிறோம்; அதுவே விசுவாசத்தின் "கேட்டல்" ஆகும். பின்பு நமது மனம் நமக்கு முன்வைக்கும் சத்தியத்தை உற்று நோக்குகிறது; அதாவது, நாம் அதைப் புரிந்து கொள்கிறோம், அதனுடைய பொருளை உணருகிறோம்; அதுவே விசுவாசத்தின் "பார்வை" ஆகும். அடுத்தபடியாக நாம் அதனுடைய விலையேறப்பெற்ற தன்மையைக் கண்டறிகிறோம்; நாம் அதை மெச்சிக்கொள்ளத் தொடங்கி, அது எவ்வளவு நறுமணம் வீசுகிறது என்பதைக் கண்டறிகிறோம்; அதுவே அதன் "நுகர்தல்" ஆகும். பின்பு கிறிஸ்துவில் நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இரக்கங்களை நாம் சுதந்தரித்துக் கொள்கிறோம்; அதுவே விசுவாசத்தின் "தொடுதல்" ஆகும். அதன்பின்பு அநுபவங்கள், சமாதானம், இன்பம், ஐக்கியம் பின்தொடர்கின்றன; அவைகளே விசுவாசத்தின் "ருசித்தல்" ஆகும். விசுவாசத்தின் இந்தச் செயல்களில் எதேனும் ஒன்று இரட்சிப்பைத் தரும். சோழலில் தேவனுடைய உறுதியான குரலாகக் கிறிஸ்துவின் குரலைக் கேட்பது நம்மை இரட்சிக்கும்; ஆனால் உண்மையான இன்பத்தைத் தருவது எங்கு கிறிஸ்து, பரிசுத்த ருசியினால் நமக்குள்ளே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருடைய இனிமையையும் விலையேறப்பெற்ற தன்மையையும் பற்றிய உள்ளார்ந்த மற்றும் ஆவிக்குரிய கிரகிப்பினாலே நம்முடைய ஆத்துமாக்களின் உணவாக மாற்றப்படுகிறாரோ, விசுவாசத்தின் அந்த அம்சமே ஆகும். அப்போதுதான் நாம் "அவருடைய நிழலிலே மிகுந்த ஆனந்தத்தோடும் உட்கார்ந்திருக்கிறோம், அவருடைய கனி நம்முடைய வாய்க்கு இனிமையாய் இருக்கிறது."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.