"அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டுவிட்டு, வெளியிலே ஓடிப்போனான்" (). சில குறிப்பிட்ட பாவங்களோடு போராடும்போது, ஓடித் தப்புவதைத் தவிர வேறு எந்த ஒரு ஜெயத்தின் வழியும் மீதியிருப்பதில்லை. பூர்வகாலத்து சுபாவ சரித்திர ஆசிரியர்கள், தங்களின் கண்களினாலேயே தங்களின் இரைகளை மயக்கி அவைகளை மகா எளிய இரையாக்கக் கூடிய நாகப்பாம்புகளைக் குறித்து ஏராளமான காரியங்களை எழுதினார்கள்; அப்படியே தீமையின் வெறும் பார்வைகூட நம்மைக் விசனகரமான ஆபத்திற்குள் தள்ளக் கூடும். தீமையின் செயல்களிலிருந்து பத்திரமாய் இருக்க விரும்புகிறவன், அதற்கான தருணங்களிலிருந்து உடனே ஓடித் தப்ப வேண்டும். சோதனையின் காரணத்தை நோக்கிப் பார்க்கக் கூடாதபடி நம்முடைய கண்களோடு ஒரு உடன்படிக்கை செய்யப்பட வேண்டும், ஏனெனில் அத்தகைய பாவங்களுக்கு ஒரு சிறிய பொறி மாத்திரமே தேவை, அடுத்த கணமே அது ஒரு மாபெரும் ஜுவாலையாக மாறிவிடும். தொழுநோயாளிகளின் சிறைக்குள் மனப்பூர்வமாய் நுழைந்து, அதனுடைய கொடிய அசுத்தங்களின் மத்தியில் உறங்க விரும்புகிறவன் யார்? தான் தொழுநோயாளியாக மாற வாஞ்சிப்பவன் மாத்திரமே அத்தகைய தொற்றினை நாடுவான். மாலுமியானவன் ஒரு புயலை எவ்வாறு தவிர்ப்பது என்று அறிந்திருந்தால், அந்தப் புயலைச் சந்திக்கும் ஆபத்தை ஏற்பதைக் காட்டிலும் அவன் எதையும் செய்ய ஆயத்தமாவான். ஜாக்கிரதையுள்ள மாலுமிகள் தங்களின் கப்பல் ஓட்டையை உண்டாக்காதபடிக்கு எந்தளவிற்கு மணல் திட்டுக்கருகே செல்லலாம், அல்லது எத்தனை முறை ஒரு கற்பாறையைத் தொடலாம் என்று சோதித்துப் பார்க்க விரும்புவதில்லை; அவா்களுடைய நோக்கம் முடிந்தவரை பாதுகாப்பான ஒரு நீரோட்டத்தின் மையத்திலேயே தங்களின் கப்பலைச் செலுத்துவதாய் இருக்கும்.
இந்த நாளில் நான் மாகா பெரிய ஆபத்திற்கு ஆளாகலாம், அதிலிருந்து விலகியிருக்க எனக்குப் பாம்பின் விவேகம் இருப்பதாக (). சிங்கத்தின் தாடைகளைக் காட்டிலும் புறாவின் சிறகுகள் எனக்கு இன்று அதிகப் பிரையೋಜನமுள்ளதாய் இருக்கலாம். தீய சமுதாயத்தை மறுப்பதினாலே நான் வெளிப்பார்வையில் நஷ்டமடைபவனாகத் தோன்றினாலும், என் குணத்தை இழப்பதைக் காட்டிலும் என் சால்வையை விட்டுச் செல்வது எவ்வளவோ மேல்; நான் ஐசுவரியவானாய் இருப்பது அவசியமல்ல, ஆனால் நான் தூய்மையாய் இருப்பது கட்டாயமாகும். சிநேகிதத்தின் எந்தப் பிணைப்புகளும், அழகின் எந்தச் சங்கிலிகளும், தாலந்தின் எந்தப் பிரகாசங்களும், பரியாசத்தின் எந்த அம்புகளும் பாவத்திலிருந்து ஓடித் தப்பும் என் ஞானமான தீர்மானத்திலிருந்து என்னைத் திருப்பக் கூடாது. பிசாசை நான் எதிர்க்க வேண்டும், அவன் என்னை விட்டு ஓடிப்போவான் (), ஆனால் மாம்சத்தின் இச்சைகளுக்கோ நான் ஓடித் தப்ப வேண்டும், இல்லையென்றால் அவைகள் நிச்சயமாக என்னை மேற்கொண்டுவிடும். ஓ பரிசுத்தத்தின் தேவனே, மாயாஜால ஸ்திரீ தன் கொடிய ஆலோசனைகளினால் தங்களின் யோசேப்புகளை மயக்காதபடி அவா்களைக் காத்தருளும். உலகமும், மாம்சமும், பிசாசுமாகிய அந்தப் பயங்கரமான திரித்துவம் நம்மை ஒருபோதும் மேற்கொள்ளாதிருப்பதாக!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.