"தங்கள் ஆபத்தில் என்னை அதிகாலமே தேடுவார்கள்" (). இழப்புகளும் இக்கட்டுகளும் பெரும்பாலும் மகா பெரிய மேய்ப்பன் வழிதவறிப் போன தன் ஆடுகளை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப் பயன்படுத்தும் வழிகளாய் இருக்கின்றன; கொடூரமான நாய்களைப் போல அவைகள் வழிதவறியவர்களை மீண்டும் மந்தைக்குள் விரட்டுகின்றன. சிங்கங்களுக்கு அதிகப் போஷாக்கு அளிக்கப்பட்டால் அவைகளைத் தணிப்பது கூடாத காரியமாய் இருக்கும்; அவைகளின் மாபெரும் பலத்திலிருந்து அவைகள் தாழ்த்தப்பட வேண்டும், அவைகளின் வயிறுகள் காயப்பட வேண்டும், அப்போதுதான் அவைகள் தணிக்கிறவனுடைய கரத்திற்கு அடங்கும்; விசுவாசியானவன் அப்பத் தட்டுப்பாட்டினாலும் பாரமான பிரயாசத்தினாலும் கர்த்தருடைய சித்தத்திற்கு எவ்வளவோ கீழ்ப்படிதலுள்ளவனாக மாற்றப்படுவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். ஐசுவரியமும் பொருட்களின் பெருக்கமும் இருக்கும்போது, அநேக வேஷக்காரர்கள் தங்களின் தலைகளை மகா உன்னதமாய் உயர்த்திக்கொண்டு, மகா வீம்பாய்ப் பேசுகிறார்கள். தாவீதைப் போல, அவர்கள் தங்களைத் தாங்களே, "என் பர்வதத்தைத் திடப்படச்செய்தார்; நான் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை" என்று தட்டிக்கொடுத்துக் கொள்கிறார்கள் (சங்கீதம் thirty:6). கிறிஸ்தவன் ஐசுவரியவானாய் மாறும்போதும், நல்ல நற்பெயரைப் பெறும்போதும், நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும்போதும், ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தைப் பெற்றிருக்கும்போதும், அவன் தன் பந்தியில் லௌகீகப் பாதுகாப்பு என்னும் பிரபுவிற்கு அநேக முறை இடம் கொடுத்துவிடுகிறான், பின்பு அவன் மெய்யாகவே தேவனுடைய பிள்ளையாய் இருந்தால் அவனுக்கென்று ஒரு பிரம்பு அங்கே ஆயத்தமடைகிறது. சற்றுப் பொறுத்திருங்கள், அவனுடைய பொருட்கள் யாவும் ஒரு கனவைப் போல ஒழிந்து போவதை நீங்கள் காண்பீர்கள். அவனுடைய சுதந்தரத்தின் ஒரு பகுதி அங்கே போகிறது—எவ்வளவு சீக்கிரத்தில் நிலங்கள் கைகளை மாற்றுகின்றன. அந்தச் கடன், மறுக்கப்பட்ட அந்தப் பத்திரம்—அவனுடைய இழப்புகள் எவ்வளவு வேகமாய் உருண்டோடி வருகின்றன, அவைகள் எங்கே முடியும்? இத்தகைய நெருக்கடிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும்போது, அவன் தன் பின்வாங்குதல்களை எண்ணிக் கலங்கி, தன் தேவனை அண்டிக்கொள்ளத் தொடங்குவது தெய்வீக ஜீவனின் ஆசீர்வதிக்கப்பட்ட அடையாளமாய் இருக்கிறது. மாலுமியை இரட்சிப்பின் கன்மலையின் மேல் கரை சேர்க்கும் அலைகள் பாக்கியமுள்ளவை! வியாபாரத்தின் இழப்புகள் பெரும்பாலும் நம்முடைய ஆத்துமாவின் ஐசுவரியத்திற்கு என்று பரிசுத்தமாக்கப்படுகின்றன. தெரிந்துகொள்ளப்பட்ட ஆத்துமா நிறைவடைந்த கரங்களோடு கர்த்தரிடம் வர மனதாயிராவிட்டால், அது வெற்றுக்கையோடு வரும். மனிதர்கள் மத்தியில் நாம் அவரைக் கனப்படுத்த வேறு எந்த வழியும் தேவனுக்குத் தெரியாமல் போனால், அவர் நம்மை ஆழத்திற்குள் தள்ளுவார்; ஐசுவரியத்தின் உச்சியில் நாம் அவரைக் கனப்படுத்தத் தவறினால், அவர் நம்மை வறுமையின் பள்ளத்தாக்கிற்குள் கொண்டு வருவார். என்றாலும், துக்கத்தின் சுதந்தரவாளியே, நீர் இவ்விதமாய்க் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே, மாறாகச் சிட்சிக்கும் அன்பான கரத்தைக் கண்டுகொண்டு, "நான் எழுந்து, என் பிதாவினிடத்திற்குப் போவேன்" என்று கூறு ().
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.