JUN 25 EVENING

ஆதியாகமம் 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

ஆதியாகமம் 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"புறா தன் உள்ளங்கால் வைக்கிறதற்கு இளைப்பாறுகிற இடம் காணாமல்" (). வாசகரே, பேழையாகிய கிறிஸ்து இயேசுவுக்கு வெளியே உன்னால் இளைப்பாறுதலைக் காண முடிகிறதா? அப்படியானால் உன்னுடைய மார்க்கம் வீணானது என்று உறுதியாய் நம்பு. கிறிஸ்துவுடனான உன்னுடைய ஐக்கியம் மற்றும் உனக்கிருக்கும் பங்கைப்பற்றிய விழிப்பான அறிவு இல்லாமல் வேறு ஏதாகிலும் ஒன்றில் நீ திருப்தியடைந்திருக்கிறாயா? அப்படியானால் உனக்கு ஐயோ. நீ ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்துவிட்டு, உலகத்தின் இன்பங்கள் மற்றும் தேடுதல்களில் பூரண திருப்தி கண்டால் உன்னுடைய அறிக்கை பொய்யானது. பாவத்தின் அந்த அந்தரங்க அறைகளில் உன்னுடைய ஆத்துமா தன் படுக்கையை நீளமாகவும், உன்னை மூடும் போர்வையை அகலமாகவும் கண்டு இளைப்பாறக் கூடுமானால், நீ ஒரு வேஷக்காரன், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற தன்மையைப் பற்றிய தரிசனத்திற்கோ அல்லது நல் உணர்வுகளுக்கோ நீ மிகவும் தூரமாய் இருக்கிறாய். ஆனால், மறுபுறத்தில், ஆக்கினையின் பயம் இல்லாமல் உன்னால் பாவம் செய்ய முடிந்தாலும், அதுவே உனக்கு ஒரு பெரிய ஆக்கினையாய் இருக்கும் என்றும்; முழு உலகமும் உனக்குக் கிடைத்து நீ அதில் என்றென்றும் வாழ முடிந்தாலும், அதைவிட்டுப் பிரியாமல் இருப்பதே உனக்குப் பெரிய துக்கமாய் இருக்கும் என்றும் நீ உணர்ந்தால்; ஏனெனில் உன்னுடைய தேவன்—உன்னுடைய தேவனே உன்னுடைய ஆத்துமா ஏங்கித் தவிக்கும் பொருளாய் இருக்கிறார்; அப்படியிருந்தால் தைரியங்கொள், நீ தேவனுடைய பிள்ளை. உன்னுடைய சகல பாவங்கள் மற்றும் அபூரணங்களின் மத்தியிலும், இதை உன்னுடைய ஆறுதலாக எடுத்துக்கொள்: பாவத்தில் உன்னுடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் இல்லை என்றால், நீ உலகப் பாவிகளைப் போல இல்லை! நீ இன்னும் மேலான ஒன்றிற்காக அழுது ஏங்கிக் கொண்டிருக்கிறாய் என்றால், கிறிஸ்து உன்னை மறந்துவிடவில்லை, ஏனெனில் நீயும் அவரை முற்றிலும் மறந்துவிடவில்லை. விசுவாசி தன் கர்த்தர் இல்லாமல் வாழ முடியாது; அவரைப் பற்றிய தன் எண்ணங்களை விவரிக்க வார்த்தைகளே போதாது. வனாந்தரத்து மணலில் நம்மால் வாழ முடியாது, உன்னதத்திலிருந்து இறங்கும் மன்னா நமக்குத் தேவை; சிருஷ்டிகளின் மேல் நாம் வைத்த நம்பிக்கையாகிய தோல் துருத்திகளால் நமக்கு ஒரு துளி ஈரப்பசையையும் தர முடியாது, ஆனால் நம்மைப் பின்தொடரும் கன்மலையிலிருந்து நாம் குடிக்கிறோம், அந்தக் கன்மலை கிறிஸ்துவே ஆவார் (). நீ அவரைப் புசிக்கும்போது உன்னுடைய ஆத்துமா, "அவர் நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது வாலவயதுபோலப் புதியதாகிறது" () என்று பாட முடியும், ஆனால் அவர் உன்னிடம் இல்லையென்றால், உன்னுடைய நிறைந்து வழியும் ஆலைகளும், தானியம் நிறைந்த உன்னுடைய களஞ்சியங்களும் உனக்கு எந்த ஒரு திருப்தியையும் தர முடியாது: மாறாக ஞானியின் வார்த்தைகளில் அவைகளை எண்ணிப் புலம்பு, "மாயை, எல்லாம் மாயை!" ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.