மோசேக்கும் இயேசுவுக்கும் இடையே எப்பேர்ப்பட்ட ஒரு வித்தியாசம்! ஹோரேப் பர்வதத்தின் தீர்க்கதரிசி மலையின் மேல் நாற்பது நாள் இருந்தபோது, அவர் ஒருவித மறுரூபடைதலை அநுபவித்தார், அதனால் அவருடைய முகத்தின் பிரகாசம் மகா அதிகமாய் ஒளிரப் பண்ணப்பட்டது, ஜனங்களால் அவருடைய மகிமையைப் பார்க்கக் கூடாததால் அவர் தன் முகத்தின் மேல் ஒரு திரையைப் போட்டுக் கொண்டார் (). நம்முடைய இரட்சகரோ அப்படிப்பட்டவர் அல்ல. மோசே பெற்றதைக் காட்டிலும் மகா பெரிய மகிமையினால் அவர் மறுரூபடைக்கப்பட்டிருந்தார், ஆனாலும் ஜனங்கள் அவருடைய முகத்தின் வெளிச்சத்தினால் குருடாக்கப்பட்டார்கள் என்று அது எழுதப்படவில்லை, மாறாக அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரிடம் ஓடிவந்து அவரை வாழ்த்தினார்கள். நியாயப்பிரமாணத்தின் மகிமை விலக்கி வைக்கிறது, ஆனால் இயேசுவின் மகா பெரிய மகிமையோ ஈர்த்துக் கொள்கிறது. இயேசு பரிசுத்தரும் நீதியுள்ளவருமாய் இருந்தாலும், அவருடைய தூய்மையோடு கூட சத்தியமும் கிருபையும் மகா அதிகமாய் கலந்திருப்பதினால், பாவிகள் அவருடைய நன்மையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவருடைய அன்பினால் ஈர்க்கப்பட்டு அவரிடம் ஓடிவருகிறார்கள்; அவர்கள் அவரை வாழ்த்தி, தங்கள் கர்த்தராகவும் எஜமானராகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். வாசகரே, ஒருவேளை இப்போதே தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மினுங்கும் பிரகாசத்தினால் நீங்கள் குருடாக்கப்பட்டிருக்கலாம். உங்களுடைய மனச்சாட்சியின் மேல் அதனுடைய கோரிக்கைகளை நீங்கள் உணருகிறீர்கள், ஆனால் உங்களால் அதை உங்கள் வாழ்க்கையில் கைக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தவில்லை என்பதால் அல்ல, மாறாக அது உங்களது உன்னதமான மதிப்புக்குரியதாயிருக்கிறது, என்றாலும் அது உங்களை எந்த விதத்திலும் தேவனிடம் ஈர்ப்பதில்லை; நீங்கள் இருதயத்தில் இன்னும் கடினமடைந்து, விரக்திக்கு நேராகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆ, ஏழை இருதயமே! மோசேயின் விலக்கி வைக்கும் மகத்துவத்திலிருந்து உன்னுடைய கண்களைத் திருப்பி, கனிவான மகிமையோடு பிரகாசிக்கும் இயேசுவை நோக்கிப்பார். அவருடைய வழியும் காயங்களையும் முள்முடியைத் தரித்த தலையையும் பார்! அவர் தேவனுடைய குமாரன், அதிலே அவர் மோசேயைக் காட்டிலும் பெரியவர், ஆனால் அவரே அன்பின் கர்த்தர், அதிலே அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கிறவரைக் காட்டிலும் மிகவும் கனிவானவர். அவர் தேவனுடைய கோபத்தைச் சுமந்தார், தமது மரணத்தின் மூலம் எரிகிற மலையைப் போலச் Sinai வெளிப்படுத்தியதைக் காட்டிலும் தேவனுடைய நீதியை மகா அதிகமாய் வெளிப்படுத்தினார், ஆனால் அந்த நீதி இப்போது காக்கப்பட்டுவிட்டது, அதன்பின் அது இயேசுவில் விசுவாசிக்கிறவர்களின் பாதுகாவலராய் இருக்கிறது. பாவியே, இரத்தம் சிந்தும் இரட்சகரைப் பார், அவருடைய அன்பின் கவர்ச்சியை நீ உணரும் போது அவர் கரங்களுக்குள் ஓடிவா, நீ இரட்சிக்கப்படுவாய்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.