JUL 26 MORNING

2 பேதுரு 1:5-6

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,

2 பேதுரு 1:5-6

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"இப்படியிருக்க, நீங்கள் பூரண ஜாக்கிரதையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே பக்தியையும், பக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டிக்கொள்ளுங்கள்" (). ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலும் துணையினாலும், விசுவாசத்தின் பூரண நிச்சயம் என்னும் உன்னத கிருபையை நீ அநுபவிக்க விரும்பினால், வேதம் உனக்குக் கூறும் இந்த ஆலோசனையின்படி செய், "பூரண ஜாக்கிரதையுள்ளவனாய் இரு." உன்னுடைய விசுவாசம் சரியான சுபாவமுடையதா என்று கவனித்துக் கொள்—அது வெறும் உபதேசங்களின் மேலுள்ள விசுவாசமாய் இராமல், இயேசுவை மாத்திரம், இயேசுவை மாத்திரமே சார்ந்திருக்கும் எளிய விசுவாசமாய் இருக்கட்டும். உன்னுடைய தைரியத்தைக் குறித்து மகா ஜாக்கிரதையாய் இரு. நீ நீதியின் உணர்வோடு உன்னதமான பலத்தோடே முன்னோக்கிச் செல்லும்படிக்கு, தேவன் உனக்குச் சிங்கம் போன்ற முகத்தைத் தரும்படி அவரிடம் கெஞ்சி மன்றாடு. வேதவாக்கியங்களை நன்றாய் ஆராய்ந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்; ஏனெனில் உபதேசங்களின் அறிவு உன்னுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்த பெரிதும் துணைசெய்யும். தேவனுடைய வார்த்தையைக் கிரகிக்கப் பிரயாசப்படு; அது உன்னுடைய இருதயத்தில் ஐசுவரியமாய்க் குடிகொள்ளட்டும்.

இவைகளை நீ செய்த பின்பு, "ஞானத்தோடே இச்சையடக்கத்தைக் கூட்டிக்கொள்." உன்னுடைய சரீரத்தைக் கவனித்துக் கொள்: வெளிப்புறத்தில் இச்சையடக்கமுள்ளவனாய் இரு. உன்னுடைய ஆத்துமாவைக் கவனித்துக் கொள்: அந்தரங்கத்தில் இச்சையடக்கமுள்ளவனாய் இரு. உதடு, வாழ்க்கை, இருதயம் மற்றும் எண்ணங்களில் இச்சையடக்கத்தைப் பெற்றுக்கொள். இதோடு கூட, தேவனுடைய பரிசுத்த ஆவியினாலே பொறுமையைக் கூட்டிக்கொள்; உபத்திரவங்களைத் தாங்கக் கூடிய, தான் சோதிக்கப்படும்போது பொன்னாக விளங்கி எழும்பக் கூடிய அந்தப் பொறுமையை உனக்குத் தரும்படி அவரிடம் கேள். உபத்திரவங்களின் மத்தியில் நீ முறுமுறுக்காமலும் சோர்ந்துபோகாமலும் இருக்கப் பொறுமையைத் தரித்துக் கொள். அந்த உன்னத கிருபை உனக்குக் கிடைக்கும்போது பக்தியை நோக்கிப் பார். பக்தி என்பது வெறும் மார்க்க சடங்குகளைக் காட்டிலும் மேலானது. தேவனுடைய மகிமையையே உன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாக மாற்றிக்கொள்; அவருடைய சமூகத்தில் ஜீவி; அவருக்கு மிக அருகில் வாசம் பண்ணு; அவரோடு ஐக்கியம் கொள்ளத் தேடு, அப்போது நீ "பக்தியைப்" பெற்றுக்கொள்வாய்; அதோடு சகோதர சிநேகத்தைக் கூட்டிக்கொள். சகல பரிசுத்தவான்கள் மேலும் அன்பு செலுத்து: அதோடு கூட, எல்லா மனிதர்களையும் தன் கரங்களில் அரவணைத்து அவர்களுடைய ஆத்துமாக்களை நேசிக்கும் உன்னதமான அன்பைக் கூட்டிக்கொள். இந்த நவரத்தினங்களால் நீ அலங்கரிக்கப்படும்போது, இந்தப்பரலோக நற்பண்புகளை நீ எந்தளவிற்கு நடைமுறைப்படுத்துகிறாயோ, அந்தளவிற்கு உன்னுடைய உன்னதமான நிச்சயத்தினால் "உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும்" நீ கண்டுகொள்ளுவாய். நீ நிச்சயத்தைப் பெற விரும்பினால், "பூரண ஜாக்கிரதையுள்ளவனாய் இரு," ஏனெனில் வெதுவெதுப்பான நிலையும் சந்தேகமும் மிகச் சுபாவமாய் ஒன்றோடொன்று கைகோர்த்து நடக்கக் கூடியவைகளாகும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.