JUL 26 EVENING

சங்கீதம் 113:8

அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

சங்கீதம் 113:8

அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர்களைப் பிரபுக்களோடே... உட்காரப்பண்ணுகிறார்" (). நம்முடைய ஆவிக்குரிய சிலாக்கியங்கள் மகா உன்னதமான தரம் வாய்ந்தவை. "பிரபுக்கள் மத்தியில்" என்பது விசேஷித்த ஜனங்களின் சமுதாய இடமாய் இருக்கிறது. "நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது" (). விசேஷித்த ஜனங்களின் சமுதாயத்தைப் பற்றிப் பேசும்போது, இதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை! "நீங்களோ... தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருடைய சொந்த ஜனமாயுமிருக்கிறீர்கள்" (). "பரலோகத்தில் பேர்கள் எழுதப்பட்டிருக்கிற தலைப்பேறானவர்களின் பொதுச்சபையண்டை வந்து சேர்ந்திருக்கிறீர்கள்" (). பரிசுத்தவான்களுக்கு ராஜசமூகத்தில் பேசும் சிலாக்கியம் உண்டு: சாதாரண ஜனங்கள் தூரமாய் நிற்க வேண்டிய இடத்தில், பிரபுக்களுக்கு மாத்திரமே ராஜசமூகத்தில் பிரவேசிக்க அனுமதி உண்டு. தேவனுடைய பிள்ளைக்குப் பரலோகத்தின் அந்தரங்கப் பிரகாரங்களுக்குள் செல்ல இலவச பிரவேசம் உண்டு. "அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்" (). அப்போஸ்தலன், "நாம் இரக்கத்தைப் பெறும்படிக்குத் தைரியமாய்க் கிருபாசனத்தண்டை வரக்கடவோம்" () என்கிறார். பிரபுக்கள் மத்தியில் ஏராளமான ஐசுவரியம் உண்டு, ஆனால் விசுவாசிகளின் ஐசுவரியத்தோடு ஒப்பிடும்போது பிரபுக்களின் நிறைவு எம்மாத்திரம்? ஏனெனில் "எல்லாம் உங்களுடையது, நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள், கிறிஸ்து தேவனுடையவர்" (). "தமது சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?" (). பிரபுக்களுக்கு விசித்திரமான வல்லமை உண்டு. பரலோக ராஜ்யத்தின் ஒரு பிரபுவுக்கு மகா பெரிய செல்வாக்கு உண்டு: அவன் தன் சொந்த எல்லையில் செங்கோல் ஏந்துகிறான்; அவன் இயேசுவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான், ஏனெனில் "அவர் நம்மை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார், நாம் என்றென்றைக்குமாய் அரசாளுவோம்" (வெளிப்படுத்துதல் 1:6, 22:5). காலத்தினதும் நித்தியத்தினதும் கூட்டு ராஜ்யத்தின் மேல் நாம் அரசாளுவோம். பிரபுக்களுக்கு, மீண்டும், விசேஷித்த கனம் உண்டு. கிருபை நம்மை வைத்துள்ள உன்னதமான எல்லையிலிருந்து நாம் பூமியின் சகல கனங்களையும் அற்பமாய் நோக்கலாம். மனித ஆடம்பரங்கள் யாவும் இதற்கு முன்பாக எம்மாத்திரம், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவருடனேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவருடனேகூட உட்காரவும் பண்ணினார்" ()? நாம் கிறிஸ்துவின் கனத்தில் பங்குபெறுகிறோம், இதோடு ஒப்பிடும்போது பூமியின் பிரகாசங்கள் யாவும் ஒரு பொருட்டல்ல. இயேசுவுடனான ஐக்கியமே சக்கரவர்த்திகளின் கிரீடங்களில் பிரகாசித்த எல்லா நவரத்தினங்களையும் காட்டிலும் மகா ஐசுவரியமான நவரத்தினமாய் இருக்கிறது. கர்த்தருடனான இணைப்பே ராஜரீக ஆடம்பரங்களின் பிரகாசங்கள் யாவையும் விஞ்சி ஒளிரும் அழகான கிரீடமாய் இருக்கிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.