AUG 27 MORNING

எண்ணாகமம் 14:11

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

எண்ணாகமம் 14:11

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

அந்தப் பயங்கரமான அவிசுவாசம் உள்ளே நுழைந்துவிடாதபடிக்கு உங்கள் முழு ஜாக்கிரதையோடு போராடுங்கள். அது கிறிஸ்துவை எவ்வளவாய் அவமதிக்கிறதென்றால், நாம் அதற்கு இடம் கொடுத்து அவமானப்படுத்தினால் அவர் தமது வெளிப்படையான பிரசன்னத்தை நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வார். அது மண்ணிலிருந்து நம்மால் முற்றிலும் அகற்ற முடியாத ஒரு கலைச்செடி என்பது உண்மைதான், ஆனால் நாம் வைராக்கியத்தோடும் நிலைத்தன்மையோடும் அதனுடைய வேரைக் குறிக்கோளாய் கொள்ள வேண்டும். வெறுக்கத்தக்க காரியங்களில் அதுவே மகா அதிகமாய் வெறுக்கத்தக்கது. அது எவ்வளவு விஷத்தன்மை கொண்டது என்றால், அதை அநுபவிப்பவனும் அதன் கீழ் வைக்கப்படுபவனும் ஒருசேர அதனால் பாதிக்கப்படுகிறார்கள். விசுவாசியே, உன்னுடைய விஷயத்தில் அது மகா பொல்லாதது, ஏனெனில் கடந்த காலத்தில் உன்னுடைய ஆண்டவர் உனக்குச் செய்த இரக்கங்கள், இப்போது அவரைச் சந்தேகப்படுவதில் உன்னுடைய குற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன. நீ கர்த்தராகிய இயேசுவைச் சந்தேகப்படும் போது அவர், "இதோ, அரிக்கட்டிகளாலே நெருக்கப்பட்ட வண்டியைப் போல நான் உங்களுக்குள்ளே நெருக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூவலாம் (). இது மகா கூர்மையான முட்களினால் அவருடைய தலையை முடிசூட்டுவதாகும். அன்பான மற்றும் உண்மையுள்ள கணவனை ஒரு பிரியமான மனைவி சந்தேகப்படுவது மகா கொடூரமானது. அந்தப் பாவம் தேவையற்றதும், புத்தியில்லாததும், நியாயமற்றதுமாகும். இயேசு சந்தேகத்திற்குரிய எதையுமே ஒருபோதும் கொடுத்ததில்லை, நம்முடைய நடத்தை எப்போதும் அன்பானதாகவும் உண்மையுமாகவும் இருப்பவர்களுக்கு முன்பாகச் சந்தேகிக்கப்படுவது கடினமானது. இயேசு உன்னதமானவருடைய குமாரன், அவர் எல்லையற்ற ஐசுவரியத்தைக் கொண்டிருக்கிறார்; சர்வவல்லமையையும் சர்வப்பிரபுத்துவத்தையும் சந்தேகப்படுவது அவமானகரமானது. ஆயிரம் மலைகளில் உள்ள மிருகங்கள் நம்முடைய பசியான போஷாக்கிற்குப் போதுமானவைகள், பரலோகத்தின் களஞ்சியங்கள் நம்முடைய புசிப்பினாலே தீர்ந்துபோகப் போவதில்லை. கிறிஸ்து ஒரு கிணற்றாக மாத்திரம் இருந்திருந்தால் நாம் அவருடைய நிறைவைச் சீக்கிரத்தில் தீர்த்திருப்போம், ஆனால் ஒரு ஊற்றை யாரால் வற்றச் செய்ய முடியும்? எண்ணற்ற ஆவிகள் அவரிடமிருந்து தங்கள் தேவைகளைப் பெற்றுக்கொண்டன, என்றாலும் அவைகளில் ஒன்றுகூட அவருடைய வளமையின் குறைவைக் குறித்து முறுமுறுக்கவில்லை. எனவே, சிநேகிதனுடன் ஐக்கியத்தின் கட்டுகளை அறுத்துவிட்டு, காணாமல்போன இரட்சகனுக்காக நம்மைத் துக்கப்பட வைப்பதே தன் ஒரே வேலையாகக் கொண்டுள்ள இந்தப்பொய்யான துரோகியாகிய அவிசுவாசத்தை உதறித் தள்ளுவோம். புனியன் அவிசுவாசத்திற்குப் "பூனையைப் போல ஒன்பது உயிர்கள் உண்டு" என்று கூறுகிறார்: அப்படியானால், இப்போது நாம் ஒரு உயிரைக் கொல்வோம், அந்த ஒன்பது உயிர்களும் முழுமையாய் அழியும் வரை அந்தக் கிரியையைத் தொடர்வோம். கீழே விழு, துரோகியே, என் இருதயம் உன்னை வெறுக்கிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.