JAN 27 EVENING

லுூக்கா 2:19

மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

லுூக்கா 2:19

மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தித்துக்கொண்டிருந்தாள்" (). ஆசீர்வதிக்கப்பட்ட இந்த ஸ்திரீ தன் ஜீவனுள்ள மூன்று வல்லமைகளைப் பயன்படுத்தினாள்: தன் நினைவு—அவள் அந்தச் சங்கதிகளையெல்லாம் வைத்திருந்தாள்; தன் அன்பு—அவள் அவைகளைத் தன் இருதயத்திலே வைத்திருந்தாள்; தன் புத்தி—அவள் அவைகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்; இவ்விதமாய் நினைவு, அன்பு மற்றும் புத்தி யாவும் அவள் கேட்ட காரியங்களின் மேல் பயன்படுத்தப்பட்டன. பிரியமானவர்களே, உங்களது கர்த்தராகிய இயேசுவைப் பற்றி நீங்கள் கேட்டவைகளையும், அவர் உங்களுக்காகச் செய்தவைகளையும் நினைவுகூருங்கள்; கடந்த நாட்களில் நீங்கள் புசித்த பரலோக அப்பத்தின் நினைவைப் பாதுகாக்கும்படி, உங்களது இருதயத்தை மன்னாவைக் கொண்ட பொன் பாத்திரமாக மாற்றிக் கொள்ளுங்கள். கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் உணர்ந்த, அறிந்த அல்லது விசுவாசித்த எல்லாவற்றையும் உங்களது நினைவில் பொக்கிஷமாகச் சேர்த்து வையுங்கள், பின்பு உங்களது உன்னதமான அன்பு அவரை என்றென்றைக்குமாய் பலமாய்ப் பற்றிக் கொள்ளட்டும். உங்களது கர்த்தரின் ஆளுமையை நேசியுங்கள்! உங்களது இருதயமாகிய வெள்ளைக்கல் பாத்திரத்தைக் கொண்டு வாருங்கள், அது உடைந்திருந்தாலும் பரவாயில்லை, உங்களுடைய அன்பின் விலையேறப்பெற்ற தைலம் முழுவதும் அவருடைய ஆணியடிக்கப்பட்ட பாதங்களின் மேல் பாய்ந்தோடட்டும். உங்களது புத்தி கர்த்தராகிய இயேசுவின் மேல் பயன்படுத்தப்படட்டும். நீங்கள் வாசிப்பவைகளைத் தியானியுங்கள்: மேலோட்டமாய் நிறுத்தாமல், ஆழத்தில் மூழ்கிப் பாருங்கள். தன் சிறகுகளால் நீரோடையைத் தொட்டுச் செல்லும் தாரைப்பறவையைப் போல இல்லாமல், ஆழமான அலையின் கீழ்நோக்கி ஊடுருவிச் செல்லும் மீனைப் போல இருங்கள். உங்களது கர்த்தரோடு தங்கியிருங்கள்: அவர் உங்களுக்கு ஒரு இரவில் தங்கிச் செல்லும் வழிப்போக்கனைப் போல இருக்கக் கூடாது, மாறாக, "பொழுதுபோயிற்று, சாயங்காலமாயிற்று, எங்களோடு தங்கியிரும்" () என்று சொல்லி அவரை நெருக்கி ஏவுங்கள். அவரைப் பற்றிக் கொள்ளுங்கள், அவரைப் போகவிடாதிருங்கள். "சிந்திப்பது" என்ற வார்த்தையின் பொருள் சீர்தூக்கிப் பார்ப்பதாகும். நியாயத்தீர்ப்பின் தராசுகளை ஆயத்தப்படுத்துங்கள். ஓ, ஆனால் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய தராசுத் தட்டுகள் எங்கே இருக்கின்றன? "தீவுகளை மிகச் சிறிய தூளாக எண்ணுகிறார்:"—அவரை யாரால் தூக்க முடியும்? "மலைகளைத் தராசிலும் குன்றுகளைத் துலாக்கோலிலும் நிறுக்கிறார்" ()—நாம் அவரை எந்தத் தராசில் நிறுக்க முடியும்? அது அப்படியே இருக்கட்டும், உங்களது புத்தியால் கிரகிக்க முடியாவிட்டால், உங்களது அன்பினால் பற்றிக் கொள்ளுங்கள்; உங்களது ஆவியால் கர்த்தராகிய இயேசுவை அறிவின் பிடிக்குள் கொண்டுவர முடியாவிட்டால், அன்பின் கரங்களால் அவரைக் கட்டித் தழுவிக் கொள்ளுங்கள்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.