JUN 27 EVENING

1 கொரிந்தியர் 7:20

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.

1 கொரிந்தியர் 7:20

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவனவன் தான் அழைக்கப்பட்ட அழைப்பிலே நிலைத்திருக்கக்கடவன்" (). தாங்கள் தேவனுக்காக வாழக்கூடிய ஒரே வழி போதகர்களாகவோ, மிஷனரிகளாகவும், அல்லது வேதாகம ஸ்திரீகளாகவோ மாறுவதுதான் என்று சிலர் மதியற்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அந்தோ! அது உண்மையாக இருக்குமானால், உன்னதமானவரைக் மகிமைப்படுத்தும் சிலாக்கியத்திலிருந்து எத்தனை பேர் புறம்பே தள்ளப்பட்டிருப்பார்கள். பிரியமானவர்களே, அது ஊழியப் பட்டமல்ல, அது நம்முடைய உத்தம வைராக்கியமே; அது நம்முடைய உலக நிலை அல்ல, தேவனை மகிமைப்படுத்த நமக்கு விசை கொடுக்கும் அவருடைய கிருபையே ஆகும். தேவனுடைய பக்திவிருத்தியுள்ள ஊழியக்காரன் தன் தொழிலைச் செய்தபடியே, இரட்சகரின் அன்பைக் குறித்துப் பாடும் அந்தச் செருப்புத் தைக்கும் கடையில் தேவன் மெய்யாகவே மகிமைப்படுகிறார், ஆமாம், கடமைக்காக மாத்திரமே தன் அற்பமான கிரியைகளை நடப்பிக்கும் அநேக ஆலயங்களின் பிரகாரங்களைக் காட்டிலும் அங்கே அவர் அதிகமாய் மகிமைப்படுகிறார். படிப்பறிவில்லாத ஏழை வண்டிக்காரன் தன் குதிரையை ஓட்டிச் செல்லும்போது தன் தேவனை ஸ்தோத்திரிப்பதின் மூலமும், அல்லது பாதையருகே தன் உடன் தொழிலாளியோடு பேசுவதின் மூலமும், தேசமெங்கும் இடிமுழக்கத்தைப் போல நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரசித்தி பெற்ற போதகரைப் போலவே இயேசுவின் நாமம் மகிமைப்படுகிறது. நமக்குரிய தகுந்த தொழில்களில் நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதினாலேயே அவர் மகிமைப்படுகிறார். பிரியமான வாசகரே, உங்களுடைய தொழிலை விட்டுவிடுவதின் மூலம் கடமையின் பாதையை விட்டு விலகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள், அதில் இருக்கும்போதே உங்களுடைய அறிக்கைக்கு அவமானம் கொண்டு வராதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். உங்களைப் பற்றித் தாழ்மையாய் எண்ணுங்கள், ஆனால் உங்களுடைய அழைப்புகளை அற்பமாய் எண்ணாதீர்கள். நியாயமான ஒவ்வொரு தொழிலும் நற்செய்தியினாலே மகா உன்னதமான நோக்கங்களுக்கு என்று பரிசுத்தமாக்கப்பட முடியும். வேதாகமத்தைத் திருப்பிப் பாருங்கள், ஊழியங்களின் மகா அற்பமான வடிவங்கள்கூட விசுவாசத்தின் மகா துணிச்சலான பராக்கிரமங்களோடும், அல்லது பரிசுத்தத்தில் பிரகாசித்த பரிசுத்தவான்களோடும் இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எனவே உங்களுடைய தொழிலைக் குறித்து முறுமுறுக்காதிருங்கள். தேவன் உங்களுடைய நிலையையோ அல்லது உங்களுடைய வேலையையோ எப்படி அமைத்திருக்கிறாரோ, அவர் உங்களை வேறொன்றிற்கு அழைக்கிறார் என்பது உங்களுக்குத் திட்டவட்டமாய்த் தெரியாத வரை, அங்கேயே நிலைத்திருங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுடைய முழு வல்லமையோடும் தேவனை மகிமைப்படுத்துவதே உங்களுடைய முதல் கவலையாய் இருக்கட்டும். உங்களுடைய தற்போதைய எல்லையை அவருடைய துதிக்கேதுவாக நிரப்புங்கள், அவருக்கு உங்களை மற்றொரு இடத்தில் தேவைப்பட்டால் அவர் அதை உங்களுக்குக் காண்பிப்பார். இன்று மாலை வீணான ஆசைகளை ஒழித்துவிட்டு, அமைதியான மனரம்மியத்தை அரவணைத்துக் கொள்ளுங்கள் ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.