AUG 28 MORNING

யாத்திராகமம் 25:6

விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

யாத்திராகமம் 25:6

விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"வெளிச்சத்திற்கு எண்ணெயும்" (). என் ஆத்துமாவே, உனக்கு இது எவ்வளவு தேவை, ஏனெனில் உன்னுடைய விளக்கு அது இல்லாமல் நீண்ட காலம் எரியாது. வெளிச்சம் போய்விட்டால் உன்னுடைய திரி புகைந்து அருவருப்பாய் மாறும், எண்ணெய் இல்லாவிட்டால் வெளிச்சம் போய்விடும். உன்னுடைய மனித சுபாவத்தில் உனக்குள்ளே சுரக்கும் எண்ணெய் ஊற்று எதுவும் இல்லை, ஆகவே நீ விற்கிறவர்களிடம் சென்று உனக்காக வாங்க வேண்டும், அல்லது புத்தியில்லாத கன்னிகைகளைப் போல, "எங்கள் விளக்குகள் அணைந்துபோகின்றன" என்று நீ கதற வேண்டியிருக்கும் (). பிரதிஷ்டை பண்ணப்பட்ட விளக்குகளால்கூட எண்ணெய் இல்லாமல் வெளிச்சத்தைத் தரக் கூடாமல் இருந்தது; அவைகள் திருச்சபையில் பிரகாசித்த போதிலும் போஷிக்கப்பட வேண்டியிருந்தது, அவைகளின் மேல் கொடூரமான காற்றுகள் எதுவும் வீசாவிட்டாலும் அவைகளுக்குத் திரிகளிலும் கத்தரிக்கப்பட வேண்டியிருந்தது, உன்னுடைய தேவையும் அப்படியே மகா பெரியதாய் இருக்கிறது. மகா சந்தோஷமான சூழ்நிலைகளிலும் கூட, புதிய கிருபையின் எண்ணெய் உனக்குக் கொடுக்கப்பட்டாலொழிய உன்னால் மற்றொரு மணிநேரத்திற்கு வெளிச்சத்தைத் தரவே முடியாது.

கர்த்தருடைய ஊழியத்தில் எந்த ஒரு எண்ணெயும் பயன்படுத்தப்பட முடியாது; பூமியிலிருந்து பெருமளவு கசியும் பெட்ரோலியமோ, மீன்களின் உற்பத்தியோ, கொட்டைகளிலிருந்து எடுக்கப்பட்டதோ ஏற்றுக்கொள்ளப்படாது; ஒரே ஒரு எண்ணெய் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டது, அதுவே மகா சிறந்த ஒலிவ எண்ணெயாகும் (). சுபாவமான நன்மையிலிருந்து வரும் போலி கிருபை, ஆசாரியர்களின் கரங்களிலிருந்து வரும் கற்பனை கிருபை, அல்லது வெளிப்புறச் சடங்குகளிலிருந்து வரும் மாயையான கிருபை தேவனுடைய உண்மையான பரிசுத்தவானுக்கு ஒருபோதும் உதவாது; கர்த்தர் அத்தகைய எண்ணைகளின் நதிகளால் பிரியமடைய மாட்டார் என்பதை அவர் அறிவார். அவர் கெத்செமனேவின் செக்குக்குச் சென்று, அங்கே நசுக்கப்பட்டவரிடமிருந்து தனது தேவைகளைச் பெற்றுக் கொள்கிறார். நற்செய்திக் கிருபையின் எண்ணெய் தூய்மையானதும் வண்டல்களும் மசங்குகளுமற்றதாய் இருக்கிறது, ஆகவேதான் அது போஷிக்கும் வெளிச்சம் தெளிந்தும் பிரகாசமுமாய் இருக்கிறது. நம்முடைய சபைகள் இரட்சகரின் பொன்னான குத்துவிளக்குகளாய் இருக்கின்றன, அவைகள் இந்த இருண்ட உலகில் வெளிச்சமாய் இருக்க வேண்டுமானால் அவைகளுக்கு மகா அதிகமான பரிசுத்த எண்ணெய் தேவைப்படுகிறது. நமக்காகவும், நம்முடைய போதகர்களுக்காகவும், நம்முடைய சபைகளுக்காகவும் ஜெபம் செய்வோம், ஒளிக்கான எண்ணெய் அவைகளுக்கு ஒருபோதும் குறைவுபடாதிருப்பதாக. சத்தியம், பரிசுத்தம், சந்தோஷம், அறிவு, அன்பு, இவையாவும் பரிசுத்த வெளிச்சத்தின் கதிர்களாய் இருக்கின்றன, ஆனால் தேவனைப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அந்தரங்கத்தில் நாம் எண்ணெய் பெற்றாலொழிய நம்மால் அவைகளை வெளிப்படுத்த முடியாது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.