AUG 28 EVENING

ஏசாயா 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"மஞ்சரிக்காதவளே, கெம்பீரித்துப்பாடு" (). நாம் கிறிஸ்துவிற்காகச் சில கனிகளைக் கொடுத்திருந்தாலும், நாம் "அவருடைய வலதுகரத்தால் நாட்டப்பட்ட செடிகள்" () என்ற சந்தோஷமான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், நாம் மகா மலடாய் இருப்பதாக நாம் உணரும் காலங்களும் உண்டு. ஜெபம் ஜீவனற்றதாய் இருக்கிறது, அன்பு குளிர்கிறது, விசுவாசம் பலவீனமாய் இருக்கிறது, நம் இருதயத் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு கிருபையும் வாடிச் சோர்வடைகிறது. புத்துணர்ச்சி தரும் மழை தேவைப்படும் கொடூரமான வெயிலில் உள்ள புஷ்பங்களைப் போல நாம் இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த நிலையில் தான் இந்த வசனம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. "மஞ்சரிக்காதவளே, கெம்பீரித்துப்பாடு; வால்கொள்ளாதவளே, கெம்பீரமாய் ஆர்ப்பரித்துப் பாடு." ஆனால் என்னைப் பற்றி நான் என்ன பாட முடியும்? என்னால் தற்போதைய நிலையைக் குறித்துப் பேச முடியாது, கடந்த காலம் கூட மலட்டுத் தன்மையால் நிறைந்திருப்பது போலத்தான் தெரிகிறது. ஆ! என்னால் இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பாட முடியும். மீட்பர் முற்காலத்தில் எனக்குத் தந்த தரிசனங்களைக் குறித்து என்னால் பேச முடியும்; அவைகள் இல்லாவிட்டாலும், தம்முடைய ஜனங்களை மீட்க அவர் பரலோகத்தின் உயரங்களிலிருந்து வந்தபோது அவர் தன் ஜனங்கள் மேல் வைத்த மாபெரும் அன்பை என்னால் மகிமைப்படுத்த முடியும். நான் மறுபடியும் சிலுவையண்டை செல்வேன். வா, என் ஆத்துமாவே, நீ ஒரு காலத்தில் பாரத்தைச் சுமப்பவளாய் இருந்தாய், அங்கே உன்னுடைய பாரத்தை இழந்தாய். கல்வாரிக்கு மறுபடியும் செல். உனக்கு ஜீவனைத் தந்த அதே சிலுவை உனக்குப் பலனுள்ள தன்மையைத் தரலாம். என்னுடைய மலட்டுத் தன்மை என்ன? அது அவருடைய கனி உருவாக்கும் வல்லமைக்கான மேடையாய் இருக்கிறது. என்னுடைய பாழான தன்மை என்ன? அது அவருடைய நித்திய அன்பின் நவரத்தினத்திற்கான கறுப்பான பின்னணியாய் இருக்கிறது. நான் வறுமையோடு செல்வேன், நான் பலவீனத்தோடு செல்வேன், நான் என்னுடைய சகல வெட்கத்தோடும் பின்வாங்குதலோடும் செல்வேன், நான் இன்னும் அவருடைய பிள்ளைதான் என்று அவரிடம் சொல்வேன், அவருடைய உண்மைத் தன்மையான இருதயத்தின் மேல் உள்ள நம்பிக்கையில், மலடியாயிருக்கும் நானும் கெம்பீரித்துப் பாடுவேன்.

விசுவாசியே, பாடு, ஏனெனில் அது உன்னுடைய சொந்த இருதயத்தையும், பாழடைந்த மற்றவர்களின் இருதயங்களையும் தேற்றும். தொடர்ந்து பாடு, ஏனென்றால் நீ மலடியாய் இருப்பதைக் குறித்து இப்போது உண்மையாகவே வெட்கப்பட்டபடியால் நீ சீக்கிரத்தில் பலனுள்ளவனாய் மாறுவாய்; உன்னிடம் கனி இல்லாததை நினைத்து தேவன் உன்னை அருவருக்கச் செய்கிறபடியால் அவர் சீக்கிரத்தில் உன்னைத் திரளான கொத்துக்களினால் மூடுவார். நம்முடைய மலட்டுத் தன்மையின் அநுபவம் வேதனையானது, ஆனால் ஆண்டவருடைய சந்திப்புகளோ இன்பமானவைகள். நம்முடைய சொந்த வறுமையின் உணர்வு நம்மை கிறிஸ்துவிடம் துரத்துகிறது, அதுவே நாம் இருக்க வேண்டிய இடமாகும், ஏனெனில் அவரே நம்முடைய கனி கண்டெடுக்கப்படுகிறவராயிருக்கிறார் ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.