JUL 28 MORNING

சங்கீதம் 73:22

நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.

சங்கீதம் 73:22

நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் மிருகம்போலிருந்தேன், புத்தியற்றவனும் ஒன்றும் அறியாதவனுமாய் இருந்தேன்" (). தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனுடைய அறிக்கை இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; தன் அந்தரங்க வாழ்க்கையை நமக்குக் கூறும்போது அவர், "நான் மிருகம்போலிருந்தேன், புத்தியற்றவனாய் இருந்தேன்" என்று எழுதுகிறார். இங்கு "புத்தியற்றவன்" என்ற வார்த்தை சாதாரண பாஷையில் குறிப்பதைக் காட்டிலும் மகா உன்னதமான அர்த்தத்தைக் கொண்டது. இந்தச் சங்கீதத்தின் முந்தின வசனத்தில் தாவீது, "துன்மார்க்கரின் வாழ்வை நான் கண்டபோது, வீம்புக்காரர்மேல் (foolish - புத்தியில்லாதவர்கள் மேல்) பொறாமைகொண்டேன்" என்று எழுதுகிறார் (), அதின் மூலம் தான் குறிப்பிட்ட புத்தியில்லாமையில் பாவம் கலந்திருந்தது என்பதைக் காண்பிக்கிறார். அவர் தன்னை இவ்விதமாய் "புத்தியற்றவன்" என்று தாழ்த்தி, அதற்கு விசை கொடுக்கும் ஒரு வார்த்தையையும் கூட்டுகிறார்; "நான் அவ்வளவு புத்தியற்றவனாய் இருந்தேன்." தான் எவ்வளவு புத்தியற்றவனாய் இருந்தேன் என்று அவராலே விவரிக்க முடியவில்லை. அது பாவமுள்ள புத்தியீனமாய் இருந்தது, பலவீனத்தினால் அதற்குச் சாக்குப்போக்குச் சொல்ல முடியாது, மாறாக அதனுடைய துரோகத்தினாலும் திட்டவட்டமான அறியாமையினாலும் அது ஆக்கினைக்குரியதாய் இருந்தது, ஏனெனில் பக்தி இல்லாதவர்களின் தற்காலிக ஐசுவரியத்தைக் கண்டு அவர் பொறாமைப்பட்டு, அவா்கள் யாவருக்கும் காத்திருக்கும் பயங்கரமான முடிவை மறந்துபோயிருந்தார் (). நம்மை நாமே ஞானிகள் என்று அழைத்துக் கொள்ள நாம் தாவீதைக் காட்டிலும் உத்தமர்களா! நமக்குள்ளே பூரணமடைந்துவிட்டோம் என்றோ, அல்லது சிட்சையினாலே நம்முடைய சுயசித்தமெல்லாம் நம்மை விட்டு அகன்றுவிட்டது என்றோ நாம் அறிக்கை செய்கிறோமா? ஆ, இது மெய்யாகவே பெருமைதான்! தாவீதே புத்தியற்றவனாய் இருந்தாரானால், நம்மை நாமே பார்க்கக் கூடுமானால் நம்முடைய பார்வையில் நாம் இன்னும் எவ்வளவு புத்தியற்றவர்களாய் இருக்க வேண்டும்! விசுவாசியே, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்: தேவன் உனக்கு அவ்வளவு உண்மையுள்ளவராய் இருந்தும் நீ அவரைச் சந்தேகப்பட்டதைச் சிந்தித்துப் பார்—தேவன் உனக்கு உன்னதமான ஆசீர்வாதத்தைத் தரத் தன் கரங்களை உபத்திரவத்திலே குறுக்காக வைத்தபோது, "என் பிதாவே, அப்படி அல்ல" என்று நீ மூடத்தனமாய்க் கூவினதை நினைத்துப் பார் (); அவருடைய பராமரிப்புகளை அந்தகாரத்தில் வாசித்து, அவருடைய வழிமுறைகளைத் தவறாய்ப் புரிந்து கொண்டு, அவைகள் யாவும் உன்னுடைய நன்மைக்காகவே ஒன்றாய் கிரியை செய்து கொண்டிருக்கும் போது, "இவைகளெல்லாம் எனக்கு விரோதமாய் வந்திருக்கிறது" என்று நீ தவித்து முனகின அநேகத் தருணங்களைச் சிந்தித்துப் பார்! (). பாவத்தின் இன்பத்தினிமித்தம் நீ அதைத் தெரிந்துகொண்ட போது, மெய்யாகவே அந்த இன்பம் உனக்குக் கசப்பான வேராய் மாறிய அநேகத் தருணங்களைச் சிந்தித்துப் பார்! உன்னுடைய இருதயத்தை நீ அறிந்திருந்தால், பாவமுள்ள புத்தியீனம் என்னும் குற்றச்சாட்டிற்கு நீ குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; இந்த "புத்தியற்ற தன்மையை" உணர்ந்தவர்களாய், நாம் தாவீதின் அடுத்த தீர்மானத்தை நம்முடையதாக்குவோம்—"உமது ஆலோசனையின்படி நீர் என்னை நடத்துவீர்" ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.