"அவர் நன்மைகளைச் செய்கிறவராயும்... சுற்றித்திரிந்தார்" (). சில வார்த்தைகளே, என்றாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உன்னதமான அழகான ஒரு குறுஞ்சித்திரம். அங்கே அநேகத் தொடுதல்கள் இல்லை, ஆனால் அவைகள் ஒரு மாபெரும் போதகருடைய தூரிகையின் அடிகள் ஆகும். இரட்சகரைக் குறித்தும், இரட்சகரைக் குறித்து மாத்திரமே இது அதன் பூரணமான, அகலமான, மற்றும் எவ்வித தகுதியுமற்ற அர்த்தத்தில் உண்மையாய் இருக்கிறது. "அவர் நன்மைகளைச் செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார்." இந்த விவரிப்பிலிருந்து அவர் தனிப்பட்ட முறையில் நன்மை செய்தார் என்பது தெளிவாகிறது. சுவிசேஷகர்கள் எப்போதுமே நமக்குக் கூறுகிறார்கள், அவர் தன் சொந்த விரலினால் குஷ்டரோகியைத் தொட்டார் என்றும், குருடனுடைய கண்களுக்குத் தடவினார் என்றும், தூரத்திலிருந்uதே வார்த்தையை மாத்திரம் பேசும்படி கேட்கப்பட்ட சூழ்நிலைகளிலும்கூட, அவர் பொதுவாக அதற்கு இணங்காமல், தானே அந்த நோயாளியின் படுக்கையருகே சென்று, அங்கே தனிப்பட்ட முறையில் அற்புதத்தை நடப்பித்தார் என்றும் (மத்தேயு 8). நாம் நன்மை செய்ய விரும்பினால், அதை நாமே செய்ய வேண்டும் என்பதற்கு இது நமக்கு ஒரு பாடம். உன்னுடைய சொந்தக் கரத்தினாலே தர்மம் செய்; உன்னுடைய கனிவான பார்வையும் வார்த்தையும் அந்த ஈவின் மதிப்பை உன்னதமாக்கும். ஒரு சிநேகிதனுடைய ஆத்துமாவைக் குறித்து அவனிடம் பேசு; உன்னுடைய அன்பான ஏவுதல் முழு நிருபங்களின் கூட்டத்தைக் காட்டிலும் அதிகச் செல்வாக்குடையதாய் இருக்கும். நம் ஆண்டவர் நன்மை செய்த முறைமை அவருடைய ஓயாத சுறுசுறுப்பைக் காண்பிக்கிறது! தன் கரத்திற்கு அருகில் வந்த நன்மைகளை மாத்திரம் அவர் செய்யவில்லை, மாறாகத் தன் இரக்கத்தின் ஊழியங்களுக்காக அவர் "சுற்றித் திரிந்தார்." யூதேயா தேசம் முழுவதிலும் அவருடைய தரிசனத்தைக் கண்டு மகிழாத கிராமங்களோ அல்லது ஊர்களோ கிட்டத்தட்ட அங்கிருக்கவில்லை. அநேக வேஷக்காரர்கள் கர்த்தருக்கு ஊழியஞ் செய்யும் அந்த மந்தமான, சோம்பலான முறைமையை இது எவ்வளவு கொடூரமாய்க் கண்டிக்கிறது. நம்முடைய மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, நற்கிரியை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக (). கர்த்தராகிய இயேசு நன்மை செய்வதற்காகத் தன் பாதையை விட்டு விலகிச் சென்றார் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது அல்லவா? "அவர் நன்மைகளைச் செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார்." எந்த ஓர் ஆபத்தோ அல்லது கஷ்டமோ அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. தன் கிருபையின் நோக்கத்திற்குரியவர்களை அவர் தேடிச் சென்றார். நாமும் அப்படியே செய்ய வேண்டும். பழைய திட்டங்கள் பலன் தராவிட்டால், நாம் புதிய திட்டங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும், ஏனெனில் புதிய முயற்சிகள் சில நேரங்களில் வழக்கமான முறைகளைக் காட்டிலும் மேலானவைகளை நடப்பிக்கின்றன. கிறிஸ்துவின் சகிப்புத்தன்மையும், அவருடைய நோக்கத்தின் ஒருமையும் இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, இந்தத் தலைப்பின் நடைமுறைப் பிரயோஜனம் இந்த வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது, "நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துFollow செய்யும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" ().
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.