"ஆயினும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்" (). "ஆயினும்"—தாவீது தேவனிடத்தில் இப்போதே அறிக்கை செய்த அந்தச் சகல புத்தியீனங்கள் மற்றும் அறியாமையின் மத்தியிலும், தாவீது இரட்சிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்பதும், அவருடைய பிரசன்னத்தில் எப்போதும் இருக்கும் ஆசீர்வாதம் தப்பாமல் அவனுடையதாய் இருந்தது என்பதும் சற்றும் குறையாத உண்மை போல! தன் சொந்தப் பாழான நிலையை முற்றிலும் உணர்ந்தவராய், தன் சுபாவத்தின் ஏமாற்றத்தையும் அசுத்தத்தையும் அறிந்திருந்தும், விசுவாசத்தின் மகிமையான ஒரு பொங்குதலினாலே அவர், "ஆயினும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்" என்று பாடுகிறார். விசுவாசியே, ஆசாபின் இந்த அறிக்கையையும் ஒப்புக்கொள்ளுதலையும் நீயும் செய்யத் தள்ளப்பட்டிருக்கிறாய், அதே ஆவியோடு, "ஆயினும் நான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானபடியால் நான் எப்போதுமே தேவோடு இருக்கிறேன்!" என்று சொல்லப் பிரயாசப்படு. இதனுடைய பொருள் அவர் எப்போதுமே என்மேல் நோக்கமாய் இருக்கிறார், என் நன்மைக்காகவே அவர் எப்போதுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதுவே. அவருடைய கண்ணுக்கு முன்பாக எப்போதுமே;—கர்த்தருடைய கண் ஒருபோதும் உறங்குவதில்லை, என் நல்வாழ்வை அது ஓயாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது (). ஒருவனும் என்னைப் பறிக்கக் கூடாதபடிக்கு எப்போதும் அவருடைய கரத்தில்; (). பிரதான ஆசாரியன் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களைத் தன் இருதயத்தின் மேல் எப்போதுமே ஒரு நினைவூட்டலாகச் சுமந்தது போல, அவருடைய இருதயத்தின் மேல் எப்போதுமே ஒரு நினைவூட்டலாக சுமக்கப்படுகிறேன் (). தேவனே, நீர் எப்போதுமே என்னைக் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர். உமது அன்பின் அந்தரங்கங்கள் எப்போதும் என்மேல் உருகுகின்றன. நீர் உமது பராமரிப்பு யாவையும் என் நன்மைக்கேதுவாக ஓயாமல் கிரியை செய்ய வைக்கிறீர். உமது புயத்தின் மேல் என்னை ஒரு முத்திரையாக வைத்திருக்கிறீர்; உமது அன்பு மரணத்தைப் போலப் பலமாய் இருக்கிறது, திரளான தண்ணீர்களாலும் அதை அவிக்க முடியாது; வெள்ளங்களாலும் அதை மூழ்கடிக்க முடியாது (). ஆச்சரியமான கிருபை! நீர் என்னைக் கிறிஸ்துவுக்குள் காண்கிறீர், எனக்குள்ளே நான் அருவருப்பானவனாய் இருந்தாலும், நான் கிறிஸ்துவின் ஆடைகளைத் தரித்தவனாகவும், அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவனாகவும் இருப்பதைக் காண்கிறீர், இவ்விதமாய் நான் உமது பிரசன்னத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாய் நிற்கிறேன். நான் இவ்விதமாய் எப்போதும் உமது தயவில் இருக்கிறேன்—"எப்போதுமே உம்மோடிருக்கிறேன்." உள் போராட்டங்களினால் கலங்கிப் போகும் சோதிக்கப்படும் ஆத்துமாவிற்கு இதோ ஆறுதல்—வெளியே இருக்கும் அமைதியைப் பார். "ஆயினும்"—ஓ அதை உன்னுடைய இருதயத்தில் சொல், அது தரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள். "ஆயினும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.