"பிதா எனக்குத் தருகிற யாவும் என்னிடத்தில் வரும்" (). இந்த அறிக்கை தெரிந்துகொள்ளுதல் என்னும் உபதேசத்தை உள்ளடக்குகிறது: பிதா கிறிஸ்துவுக்குத் தந்த சிலர் இருக்கிறார்கள். அது பயனுள்ள அழைப்பின் உபதேசத்தை உள்ளடக்குகிறது: கொடுக்கப்பட்ட யாவரும் வந்தே தீர வேண்டும்; அவர்கள் தங்களை அதற்கு விரோதமாக எவ்வளவு பலமாய் நிறுத்தினாலும், அவர்கள் அந்தகாரத்திலிருந்து தேவனுடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் (). விசுவாசத்தின் இன்றியமையாத அவசியத்தை அது நமக்குக் கற்பிக்கிறது; ஏனெனில் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டவர்களாயிருந்தாலும் அவர்கள் இயேசுவிடம் வராவிட்டால் இரட்சிக்கப்படுவதில்லை. அவர்களும் வந்தாக வேண்டும், ஏனெனில் வழியைக் காட்டிலும் பரலோகத்திற்குச் செல்ல வேறு வழியில்லை, அவரே கிறிஸ்து இயேசு (). நம்முடைய மீட்பருக்குப் பிதா கொடுப்பவர்கள் யாவரும் அவரிடம் வந்தாக வேண்டும், எனவே கிறிஸ்துவிடம் வராமல் யாரும் பரலோகத்திற்கு வர முடியாது.
ஓ, "shall come (வருவார்கள்)" என்ற வார்த்தைகளில் இருக்கும் வல்லமையும் மகத்துவமும் எப்பேர்ப்பட்டது. அவர்கள் வரப் பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்று அவர் சொல்லவில்லை, அல்லது அவா்கள் விரும்பினால் வரலாம் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் "வருவார்கள்" என்கிறார். கர்த்தராகிய இயேசு தமது தூதர்கள், தமது வார்த்தை, மற்றும் தமது ஆவியினாலே மனிதர்கள் தன் கல்யாண விருந்திற்குள் பிரவேசிக்கும்படி அவா்களைக் கனிவோடும் கிருபையோடும் நெருக்கி ஏவுகிறார்; மனிதனுடைய சுயாதீன வல்லமையைக் கெடுப்பதின் மூலம் அல்ல, தன் கிருபையின் வல்லமையினாலேயே இதைச் செய்கிறார். மற்றொரு மனிதனுடைய சித்தத்தின் மேல் நான் என் வல்லமையை நடப்பிக்கலாம், என்றாலும் அந்த மனிதனுடைய சித்தம் பூரண விடுதலையோடு இருக்கலாம், ஏனெனில் அந்த ஏவுதல் மனித மனதின் பிரமாணங்களுக்கு இணக்கமான ஒரு வழியிலேயே நடப்பிக்கப்படுகிறது. யெகோவா இயேசு, புத்திக்குச் செலுத்தப்படும் முறியடிக்க முடியாத வாதங்களினாலும், அன்பிற்கு நேராகக் கூப்பிடும் பலத்த காரணங்களினாலும், ஆத்துமாவின் சகல வல்லமைகள் மற்றும் ஏவுதல்களின் மேல் கிரியை செய்யும் தன் பரிசுத்த ஆவியின் ரகசிய ஏவுகிற தன்மையினாலும் மனிதன் முழுமையையும் எவ்வாறு அடக்குவது என்பதை அறிந்திருக்கிறார், அதனால் ஒரு காலத்தில் அவன் கலகக்காரனாய் இருந்தும், இறையாண்மையுள்ள அன்பினால் வெல்லப்பட்டவனாய், அவருடைய அரசாங்கத்திற்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறான். ஆனால் தேவன் யாரைத் தெரிந்துகொண்டார் என்பதை எப்படி அறிவது? இந்த விளைவினால் அறியலாம்: அவர்கள் மனப்பூர்வமாகவும் சந்தோஷமாகவும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தங்களுடைய முழு இரட்சிப்பும் முழு வாஞ்சையுமாய் இருக்கிற அவரில் மாத்திரம் சார்ந்து, எளிய உத்தம விசுவாசத்தோடு அவரிடம் வருகிறார்கள். வாசகரே, நீங்கள் இவ்விதமாய் இயேசுவிடம் வந்திருக்கிறீர்களா?
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.