JAN 30 MORNING

2 சாமுவேல் 5:24

முசுக்கட்டைச் செடிகளின் துணிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தைமுறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

2 சாமுவேல் 5:24

முசுக்கட்டைச் செடிகளின் துணிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தைமுறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நீ முசுக்கட்டை மரங்களின் உச்சிகளிலே இரதங்களின் இரைச்சலைக் கேட்கும்போது, தீவிரமாய் எழும்பிப்போ" (). கிறிஸ்துவின் சபையின் அவயவங்கள் மிகவும் ஜெபசிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டும், கிறிஸ்துவின் ராஜ்யம் வரவும், அவருடைய "சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" () என்பதற்காகவும், பரிசுத்தரின் அபிஷேகம் தங்களின் இருதயங்களின் மேல் தங்க எப்போதுமே தேட வேண்டும்; ஆனால் தேவன் விசேஷித்த விதத்தில் சீயோனுக்கு அநுகூலம் செய்கிறது போலத் தோன்றும் காலங்கள் உண்டு, அத்தகைய காலங்கள் அவர்களுக்கு "முசுக்கட்டை மரங்களின் உச்சிகளிலே இரதங்களின் இரைச்சல்" கேட்பதைப் போல இருக்க வேண்டும். நாம் அப்போது வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாய் ஜெபசிந்தையுள்ளவர்களாயும், இரட்டிப்பான வைராக்கியமுள்ளவர்களாயும், சிங்காசனத்தருகே அதிகமாய் போராடுகிறவர்களாயும் இருக்க வேண்டும். கிரியை அப்போது துரிதமானதாகவும் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அலை எழும்பிக் கொண்டிருக்கிறது—இப்போது நாம் கரைக்கு நேராக மனிதவலுவோடு துடுப்புப் போடுவோமாக. பெந்தெகொஸ்தே நாளின் ஊற்றுதல்களுக்காகவும் பெந்தெகொஸ்தே நாளின் பிரயாசங்களுக்காகவும் கிருபை தாரும். கிறிஸ்தவனே, உனக்குள்ளேயும் "முசுக்கட்டை மரங்களின் உச்சிகளிலே இரதங்களின் இரைச்சலைக் கேட்கும்" காலங்கள் உண்டு. ஜெபத்தில் உனக்கு ஒரு விசேஷித்த வல்லமை இருக்கிறது; தேவனுடைய ஆவியானவர் உனக்குச் சந்தோஷத்தையும் பூரிப்பையும் தருகிறார்; வேதாகமம் உனக்குத் திறக்கப்படுகிறது; வாக்குத்தத்தங்கள் கிரியை செய்கின்றன; நீ தேவனுடைய முகத்தின் வெளிச்சத்தில் நடக்கிறாய்; பக்திவிருத்தியில் உனக்கு விசேஷித்த விடுதலையும் சிலாக்கியமும் உண்டு, வழக்கத்தைக் காட்டிலும் கிறிஸ்துவோடு அதிக நெருங்கிய ஐக்கியம் உனக்கு இருக்கிறது. இப்போது, "முசுக்கட்டை மரங்களின் உச்சிகளிலே இரதங்களின் இரைச்சலைக் கேட்கும்" அத்தகைய மகிழ்ச்சியான காலங்களில்தான் நீ தீவிரமாய் எழும்ப வேண்டும்; தேவனுடைய ஆவியானவர் உன்னுடைய பலவீனங்களில் உதவி செய்யும்போது, எந்த ஒரு தீய பழக்கத்திலிருந்தும் விடுபடுவதற்கான நேரம் இதுவே. உன்னுடைய பாய்மரத்தை விரித்து வை; ஆனால் நீ சில நேரங்களில் பாடுவதை நினைவில் கொள்—"என்னால் பாய்மரத்தை மாத்திரமே விரிக்க முடியும், கிருபையுள்ள காற்றை நீர், நீர் மாத்திரமே வீசச் செய்ய வேண்டும்." உன்னுடைய பாய்மரம் விரிந்திருப்பதை மாத்திரம் உறுதி செய்து கொள். ஆயத்தமில்லாததின் காரணமாக அந்தக் காற்றைத் தவறவிட்டுவிடாதே. விசுவாசத்தில் நீ பலமடையும்போது ஊழியத்தில் அதிக வைராக்கியமாய் இருக்கவும்; சிங்காசனத்தில் உனக்கு அதிக விடுதலை இருக்கும்போது ஜெபத்தில் அதிக உறுதியாய் இருக்கவும்; நீ கிறிஸ்துவோடு அதிக நெருங்கி வாழும்போது உன்னுடைய நடத்தை அதிகப் பரிசுத்தமானதாய் இருக்கவும் தேவனுடைய உதவியைத் தேடு.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.