"என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை (in no wise cast out)" (). இந்த வாக்குத்தத்தத்தின் காலத்திற்கு எந்த ஓர் எல்லையும் குறிக்கப்படவில்லை. முதலில் வரும் ஒரு பாவியை நான் தள்ளமாட்டேன் என்று மாத்திரம் அது சொல்லவில்லை, மாறாக "நான் ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை" என்கிறது. மூல பாஷையில், "நான் தள்ளவே தள்ளமாட்டேன்," அல்லது "நான் ஒருபோதும், ஒருபோதும் புறம்பே தள்ளமாட்டேன்" என்று வாசிக்கலாம். இந்த வசனத்தின் பொருள், கிறிஸ்து விசுவாசியை முதலில் நிராகரிக்க மாட்டார்; அவர் அதை முதலில் செய்ய மாட்டார் என்பது எவ்வளவு நிச்சயமோ, கடைசி வரையிலும் செய்ய மாட்டார் என்பதும் அவ்வளவு நிச்சயம்.
ஆனால் விசுவாசி வந்த பின்பு பாவம் செய்தால்? "ஒருவன் பாவஞ்செய்வானானால் பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்துபேசுகிற நீதிமானாயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு அட்வகேட்டாய் (பரிந்துபேசுபவராய்) இருக்கிறார்" (). ஆனால் விசுவாசிகள் பின்வாங்கிப் போனால்? "நான் அவர்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று" (). ஆனால் விசுவாசிகள் சோதனையின் கீழ் விழுந்தால்! "தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்குமேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (). ஆனால் விசுவாசி தாவீதைப் போலப் பாவத்தில் விழுந்தால்! ஆம், ஆனால் அவர் "என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக்கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையைப்பார்க்கிலும் வெண்மையாவேன்" (); "அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, அவர்களைச் சுத்திகரிப்பேன்" ().
"ஒருமுறை கிறிஸ்துவுக்குள் இருந்தால், என்றென்றைக்குமாய் கிறிஸ்துவுக்குள், எதுவும் அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது."
"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை" என்று அவர் சொல்லுகிறார் (). நடுங்குகிற பலவீனமான மனமே, இதற்கு நீ என்ன சொல்லுகிறாய்? கிறிஸ்துவிடம் வரும்போது, நீ கொஞ்சக் காலத்திற்கு உன்னை நன்றாய் நடத்திவிட்டு, பின்பு உன்னை உன்னுடைய காரியங்களிடம் அனுப்பிவிடுகிற ஒருவரிடம் வரவில்லை, மாறாக அவர் உன்னை ஏற்றுக்கொண்டு உன்னைத் தமக்கு மணவாட்டியாக்குவார், நீ என்றென்றைக்குமாய் அவருடையவளாய் இருப்பாய் என்ற இந்த விசேஷித்த இரக்கம் விலையேறப்பெற்றது அல்லவா? பயப்படுவதற்குக் அடிமைத்தனத்தின் ஆவியை இனி மறுபடியும் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்க புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்! (). ஓ! இந்த வார்த்தைகளின் கிருபை எப்பேர்ப்பட்டது: "நான் ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.