JAN 31 MORNING

எரேமியா 23:6

அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.

எரேமியா 23:6

அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"யெகோவா விதேனு"—கர்த்தரே நம்முடைய நீதி (). கிறிஸ்துவின் பூரண நீதியைப் பற்றிச் சிந்திப்பது ஒரு கிறிஸ்தவனுக்கு எப்போதுமே மகா பெரிய அமைதியையும், நிம்மதியையும், ஆறுதலையும், சமாதானத்தையும் தரும். தேவனுடைய பரிசுத்தவான்கள் எவ்வளவு அடிக்கடி தளர்ச்சியடைந்தும் துக்கத்தோடும் இருக்கிறார்கள்! அவர்கள் அப்படி இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். கிறிஸ்துவுக்குள் தங்களின் பூரணத்துவத்தை எப்போதுமே காணக் கூடுமானால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இருதயத்தின் சீர்கேட்டைக் குறித்தும், ஆத்துமாவின் உள்ளார்ந்த தீமையைக் குறித்தும் எப்போதுமே பேசிக் கொண்டிருப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். இது முற்றிலும் உண்மைதான், ஆனால் ஏன் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிச் சென்று, நாம் "கிறிஸ்து இயேசுவுக்குள் பூரணாளராக" இருக்கிறோம் என்பதை நினைவுகூரக் கூடாது. தங்களின் சொந்தச் சீர்கேட்டைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பவர்கள் அத்தகைய தளர்ச்சியான முகத்தைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால் "கிறிஸ்து நமக்கு நீதியாக மாறினார்" () என்பதை நாம் நினைவில் கொண்டால் நிச்சயமாக நாம் தைரியமாயிருப்போம். இக்கட்டுகள் என்னை வேதனைப்படுத்தினாலும், சாத்தான் என்னை எதிர்த்தாலும், நான் பரலோகத்தை அடைவதற்கு முன் அநுபவிக்க வேண்டிய காரியங்கள் பல இருந்தாலும், அவைகள் கிருபையின் உடன்படிக்கையில் எனக்காகச் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன; என் ஆண்டவரிடம் குறைவுபடுவது ஒன்றுமில்லை, கிறிஸ்து எல்லாவற்றையும் செய்து முடித்தார். சிலுவையின் மேல் அவர், "முடிந்தது!" () என்றார்; அது முடிந்திருக்குமானால், நான் அவருக்குள் பரிபூரணமடைந்திருக்கிறேன், "நான் நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியையுடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியையுடையவனாயிருந்து" (), சொல்லொணாததும் மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷத்தோடு களிகூர முடியும். கிறிஸ்துவின் நீதியின் உபதேசத்தைத் தங்களின் இருதயங்களில் ஏற்றுக்கொள்பவர்களைக் காட்டிலும் பரிசுத்தமான ஜனங்களை நீங்கள் இந்தப்பக்க பரலோகத்தில் காண முடியாது. விசுவாசி, "நான் கிறிஸ்துவில் மாத்திரமே வாழ்கிறேன்; இரட்சிப்பிற்காக முற்றிலும் அவரையே சார்ந்திருக்கிறேன்; நான் தகுதியற்றவனாக இருந்தாலும் இயேசுவுக்குள் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லும்போது, நன்றியறிதலின் நோக்கமாக இந்தச் சிந்தனை எழுகிறது—"நான் கிறிஸ்துவுக்காக வாழ வேண்டாமா? அவருடைய புண்ணியங்களினால் நான் இரட்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டு நான் அவரை நேசித்து அவருக்கு ஊழியம் செய்ய வேண்டாமா?" "கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது," "பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்துயிர்த்தெழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி" (). எண்ணப்பட்ட நீதியினால் இரட்சிக்கப்பட்டால், அளிக்கப்பட்ட நீதியை நாம் பெரிதும் மதிப்போம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.