JAN 31 EVENING

2 சாமுவேல் 18:23

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.

2 சாமுவேல் 18:23

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அப்பொழுது அகிமாஸ் சமபூமியான வழியாய் ஓடி, கூஷிய முந்திக்கொண்டான்" (). ஓடுவது மாத்திரம் எல்லாமே அல்ல, நாம் தெரிந்துகொள்ளும் வழியிலும் அநேக காரியங்கள் உண்டு: மலையின் மேலும் பள்ளத்தாக்கின் கீழும் ஓடும் ஒரு வேகமான பாதம், சமபூமியான வழியில் செல்லும் மெதுவான பிரயாணியோடு இணையாக வர முடியாது. என்னுடைய ஆவிக்குரிய பயணம் எப்படி இருக்கிறது, என் சொந்தக் கிரியைகளாகிய மலையின் மேல் பிரயாசப்பட்டு, என் சொந்தத் தாழ்மைகளும் தீர்மானங்களுமாகிய பள்ளத்தாக்குகளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறேனா, அல்லது "விசுவாசி மற்றும் ஜீவி" என்ற சமபூமியான வழியாய் ஓடுகிறேனா? விசுவாசத்தினாலே கர்த்தருக்குக் காத்திருப்பது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட காரியம்! விசுவாசிக்கிற வழியில் ஆத்துமா சோர்ந்துபோகாமல் ஓடுகிறது, பலவீனமடையாமல் நடக்கிறது (). கிறிஸ்து இயேசுவே ஜீவனுள்ள வழி, அவர் சமபூமியான வழி, இன்பமான வழி, நடுங்குகிற பாவிகளின் தள்ளாடும் பாதங்களுக்கும் பலவீனமான முழங்கால்களுக்கும் ஏற்ற வழி: நான் இந்த வழியில் காணப்படுகிறேனா, அல்லது குருமார்களின் தந்திரங்களோ அல்லது தத்துவங்களோ எனக்கு வாக்குத்தத்தம் பண்ணும் மற்றொரு பாதையைத் தேடிக் கொண்டிருக்கிறேனா? பரிசுத்தமான வழியைக் குறித்து நான் வாசிக்கிறேன், வழிப்போக்கனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அதில் வழிதவறுவதில்லை (): நான் பெருமையான அறிவிலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசுவின் அன்பிலும் இரத்தத்திலும் இளைப்பாற ஒரு சிறிய பிள்ளையைப் போலக் கொண்டுவரப்பட்டிருக்கிறேனா? அப்படி இருந்தால், தேவனுடைய கிருபையினாலே, வேறு எந்தப் பாதையைத் தெரிந்துகொள்ளும் பலத்த ஓட்டக்காரனையும் நான் முந்திக்கொள்வேன். இந்தச் சத்தியத்தை என் தினசரி கவலைகளிலும் தேவைகளிலும் என் பிரயோஜனத்திற்காக நினைவுகூரலாம். இந்தச் சிநேகிதனிடமும் அந்தச் சிநேகிதனிடமும் சுற்றும் வழியில் அலையாமல், உடனே என் தேவனிடம் செல்வதே என் ஞானமான வழியாய் இருக்கும். அவர் என் தேவைகளை அறிவார், அவைகளை நிவர்த்தி செய்ய முடியும், ஜெபத்தின் நேரடி முறையினாலும், வாக்குத்தத்தத்தின் எளிய வாதத்தினாலும் அவரிடமன்றி வேறு யாரிடம் நான் செல்வேன்? "நேரான வழியே சிறந்த ஓட்டக்காரனை உருவாக்குகிறது." நான் வேலைக்காரர்களோடு பேசிக் கொண்டிருக்காமல், அவர்களுடைய எஜமானரிடம் விரைந்து செல்வேன்.

இந்த வசனத்தை வாசிக்கும்போது, சுபாவமான காரியங்களில் மனிதர்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, ஒருவன் மற்றொருவனை முந்திக்கொள்வானானால், நானும் அதைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடும்படி பரிசுத்த வைராக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆண்டவரே, என் மனதின் அரையைக் கட்டிக்கொள்ள எனக்கு உதவி செய்யும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தீவிரமாய் ஓடுவேனாக ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.