JUL 31 EVENING

1 நாளாகமம் 9:33

இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:33

இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பாடகராயிருந்த இவர்கள்... இரவும் பகலும் தங்கள் வேலையில் ஜாக்கிரதையாயிருந்தபடியால்" (). ஆலயத்தில் பரிசுத்த கீதம் ஒருபோதும் ஓயாதபடிக்கு ஒழுங்கு செய்யப்பட்டது எவ்வளவோ நலமாய் இருந்தது: கிருபை என்றென்றைக்குமுள்ளது என்று பாடகர்கள் எப்போதுமே கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். இரவிலும் சரி பகலிலும் சரி இரக்கம் ஆளுகை செய்வதை நிறுத்தாதது போல, இசையும் தன் பரிசுத்த ஊழியத்தை ஒருபோதும் அணைக்கவில்லை. என் இருதயமே, சீயோன் ஆலயத்தின் மாறாத சங்கீதத்திலே உனக்கு ஒரு பாடம் இனிமையாய் கற்பிக்கப்பட்டிருக்கிறது, நீயும் ஒரு மாறாத கடனாளியாய் இருக்கிறாய், உன்னுடைய நன்றியறிதலும், அன்பைப் போல, ஒருபோதும் ஒழிந்துபோகாதபடி பார்த்துக் கொள். பரலோகத்தில் தேவனுடைய துதி மாறாததாய் இருக்கிறது, அதுவே உன்னுடைய இறுதி வாசஸ்தலமாய் இருக்கப் போகிறது, நித்திய அல்லேலூயாவை நடைமுறைப்படுத்த நீயும் கற்றுக்கொள். பூமியைச் சுற்றிலும் சூரியன் தன் வெளிச்சத்தைப் பரப்பும்போது, அவருடைய கதிர்கள் நன்றியுள்ள விசுவாசிகளைத் தங்களின் காலைச் சங்கீர்த்தனத்தைத் தொடுக்க எழுப்புகின்றன, அதினாலே பரிசுத்தவான்களின் ஆசாரிய ஊழியத்தினாலே எல்லா மணிநேரங்களிலும் மாறாத துதி எழும்பிக் கொண்டிருக்கிறது, அவர்கள் நம்முடைய உலகத்தை நன்றியறிதல் என்னும் சால்வையினால் மூடி, அதைச் சங்கீதத்தின் பொன்னான அரைக் கச்சையினால் கட்டுகிறார்கள்.

கர்த்தர் தன் சுபாவத்தில் என்னவாய் இருக்கிறாரோ அதற்காகவும், அவருடைய சிருஷ்டிப்பு மற்றும் பராமரிப்பின் கிரியைகளுக்காகவும், சிருஷ்டிகளின் மேல் அவர் வைக்கும் நன்மைகளுக்காகவும், விசேஷித்த விதத்தில் விஞ்சிய மீட்பின் செயலுக்காகவும், அதிலிருந்து பாயும் சகல ஆச்சரியமான ஆசீர்வாதங்களுக்காகவும் அவர் எப்போதுமே துதிக்கப்படத் தகுதியானவர். கர்த்தரைத் துதிப்பது எப்போதுமே பிரயோஜனமானது; அது பகலைத் தேற்றுகிறது, இரவைப் பிரகாசமாக்குகிறது; அது பிரயாசத்தைத் லேசாக்குகிறது, துக்கத்தைத் தணிக்கிறது; உலக சந்தோஷங்களின் மேல் அது ஒரு பரிசுத்தமான பிரகாசத்தைப் பரப்புகிறது, அதினாலே அதனுடைய உஷ்ணத்தினால் நாம் குருடராகிப் போகும் ஆபத்து குறைகிறது. இந்த கணத்தில் நாம் பாடுவதற்கு ஏதாகிலும் ஒன்று நம்மிடம் இல்லையா? நம்முடைய தற்போதைய சந்தோஷங்களிலிருந்தோ, அல்லது கடந்த கால விடுதலைகளிலிருந்தோ, அல்லது நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளிலிருந்தோ நம்மால் ஒரு சங்கீதத்தைத் தொடுக்க முடியாதா? பூமி தன் கோடைகாலக் கனிகளைத் தருகிறது: புல் அறுத்துச் சேர்க்கப்பட்டது, பொன்னான தானியம் அறிவாளை அழைக்கிறது, பலனுள்ள பூமியின் மேல் பிரகாசிக்கச் சூரியன் அதிக நேரம் தங்கியிருப்பதால், அந்தகாரத்தின் இடைவெளி சுருங்கி, பக்திவிருத்தியின் ஆராதனை மணிநேரங்களை நாம் நீட்டிக்க முடிகிறது. இயேசுவின் அன்பினாலே, நாம் இந்த நாளைப் பரிசுத்தமான மகிழ்ச்சியின் சங்கீதத்தோடு முடிக்கக் கிளப்பப்படுவோமாக. ஆமென்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.